12884 – மிஸ்றின் வசியம்.

எ.எம்.எ.அஸீஸ். யாழ்ப்பாணம்: கலைவாணி புத்தக நிலையம், இல.10, பிரதான வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1967. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம், இல. 10, பிரதான வீதி).

(8), 190 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 3.00, அளவு: 18 x 12 சமீ.

மிஸ்றின் வசியம், ஏ.எம்.ஏ.அஸீஸ் அவர்களின் மிஸ்ர் (எஹிப்து) நாட்டுக்கான பிரயாணத்தைப் பற்றிய நூலாயினும், அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள், அறபு நாடுகள், இந்தியா, பாக்கிஸ்தான் முதலிய தேசங்களுக்குப் பிரயாணஞ் செய்து பெற்ற அனுபவங்களையும் ஆங்காங்கே பிரதிபலிக்கின்றது. எகிப்து வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடு. கெய்ரோ இந்நாட்டின் தலைநகர் ஆகும். இது உலகின் 15வது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும். மேற்கே லிபியாவையும், தெற்கே சூடானையும், கிழக்கே காசாக் கரை மற்றும் இஸ்ரேலையும் எல்லையாகக் கொண்ட எகிப்தின் இஸ்லாமியப் பெயரே மிஸ்ர் என்பதாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18407).

ஏனைய பதிவுகள்