ஆரையம்பதி க.சபாரெத்தினம். சென்னை 24: இளம்பிறை பதிப்பகம், 32-8 (375),ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, டிசம்பர் 2002. (சென்னை 600 024: இளம்பிறை பதிப்பகம்).
232 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 75.00, அளவு: 18 x 12 சமீ., ISBN: 81-88686-00-x.
ஆசிரியர் 1991 மே மாதம் முதல் நான்காண்டுகள் மொஸ்கோ நகரிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றவென அனுப்பிவைக்கப்பட்டார். அக்கால கட்டத்து அனுபவங்களை இந்நூலில் இரண்டு பிரிவுகளில் சுவையான சிறு கட்டுரைவடிவில் எழுதியிருக்கிறார். முதலாம் பகுதியான ‘பொது நிகழ்வுகள்’ என்ற பிரிவில் 20 கட்டுரைகளும், இரண்டாம் பகுதியான ‘கடமைசார் நிகழ்ச்சிகள்’ என்ற பிரிவில் மேலும் 12 கட்டுரைகளுமாக மொத்தம் 32 மொஸ்கோ அனுபவக் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32996). மேலும் பார்க்க: 12995,12997