12886 – அல்மாத் தோட்டக் கணக்கப்பிள்ளை சுப்பையா சிவஞானம் நினைவு மலர்.

சிவஞானம் பிரபாகரன் (குடும்பத்தினர் சார்பாக). ஆள்கரனோயா: சுப்பையா சிவஞானம் குடும்பத்தினர், சீட்டன் இல்லம், இல. 6, மஹாகுடுகல குடியிருப்பு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2006. (களனி: பிரின்ட்கெயார் குழுமம், இல. 77, நுண்கமுகொட பாதை).

73 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 14.5 சமீ.

அமரர் அல்மாத் தோட்ட கணக்கப்பிள்ளை சிவஞானம் (27.1.1936-26.7.2006) நினைவாக மலையகம் பற்றிய சிந்தனைகளுடன் வெளிவந்துள்ள நினைவு மலர் இதுவாகும். அமரர் சுப்பையா சிவஞானம் கந்தப்பளை அல்மாத் தோட்டம் சிட்டன் பிரிவில் வாழ்ந்தவர். இம்மலரில் அறிமுகம், அல்மாத் தோட்டம் சில வரலாற்றுப் பதிவுகள், குடும்பத்தவரின் இரங்கல் உரைகள், அல்மா சகாக்களின் உணர்வுகள் ஆகிய நினைவுப் பதிகைகளுடன், பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதிய ‘மலையகப் பண்பாட்டுப் பேணுகை: சிக்கல்களும் சவால்களும்’, தை.தனராஜ் எழுதிய ‘மலையகக் கல்வி ஒரு எதிர்கால நோக்கு’, சீ.அ.யோதிலிங்கம் எழுதிய ‘மலையக அரசியல் வரலாற்று வளர்ச்சியும், முன் நகர்த்த வேண்டிய பணிகளும்’ ஆகிய தலைப்புகளிலான மலையகம் சார்ந்த கட்டுரைகளும் மீள்பிரசுரம் செய்யப் பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40003).

ஏனைய பதிவுகள்

12052 – காயத்ரி என்றால் என்ன?

தவயோகி கண்ணையா. நுவரெலியா: ஸ்ரீ காயத்ரி சித்தர் ஆர்.கே.முருகேசு சுவாமிகள் ஸ்ரீலங்காதீஸ்வரர் ஆலயம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை). 16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 14×11.5 சமீ.

14944 ஈழத்து இசை நாடக மரபு வளர்ச்சியில் அண்ணாவியார் எஸ்.தம்பிஐயா: ஆய்வுநூல்.

குயீன் ஜெஸிலி கலாமணி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). viii, 96 பக்கம், விலை:

12536 – சூடாமணி நிகண்டு பதினொராவது பன்னிரண்டாவது (மூலமும் உரையும்).

மண்டல புருடர் (மூலம்), ஆறுமுகநாவலர் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், நல்லூர், 5வது பதிப்பு, 1925, முதலாவது பதிப்பு விபரமில்லை. (சென்னை: நிரஞ்சன விலாச அச்சியந்திரசாலை, சூளை). 82+42 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

12090 – இந்து தருமம் 1960-1961 (மாணவர் மலர்).

சி.அமிர்தலிங்கம், ச.ஈஸ்பரதாசன் (இதழாசிரியர்கள்). பேராதனை: இந்து மாணவர் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1961. (யாழ்ப்பாணம்: ஈழநாடு அச்சகம்). (8), 48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ. இவ்விதழில் இந்து

14803 மொழியா வலிகள் பகுதி 1.

இ.தியாகலிங்கம். நோர்வே: இ.தியாகலிங்கம், Vetlandsveien 117, 0686 Oslo, 1வது பதிப்பு ஓகஸ்ட் 2018. (மின்நூல் வடிவமைப்பு ulu.com சுய வெளியீடு உதவி). 229 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21×14.5 சமீ., ISBN:

12239 – சர்வதேச அரசியல் பிரச்சினைகள்: மொழிபெயர்ப்புக் கட்டுரைகளின் தொகுப்பு.

க.சண்முகலிங்கம் (தொகுப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). viii, 108 பக்கம்,