12886 – அல்மாத் தோட்டக் கணக்கப்பிள்ளை சுப்பையா சிவஞானம் நினைவு மலர்.

சிவஞானம் பிரபாகரன் (குடும்பத்தினர் சார்பாக). ஆள்கரனோயா: சுப்பையா சிவஞானம் குடும்பத்தினர், சீட்டன் இல்லம், இல. 6, மஹாகுடுகல குடியிருப்பு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2006. (களனி: பிரின்ட்கெயார் குழுமம், இல. 77, நுண்கமுகொட பாதை).

73 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 14.5 சமீ.

அமரர் அல்மாத் தோட்ட கணக்கப்பிள்ளை சிவஞானம் (27.1.1936-26.7.2006) நினைவாக மலையகம் பற்றிய சிந்தனைகளுடன் வெளிவந்துள்ள நினைவு மலர் இதுவாகும். அமரர் சுப்பையா சிவஞானம் கந்தப்பளை அல்மாத் தோட்டம் சிட்டன் பிரிவில் வாழ்ந்தவர். இம்மலரில் அறிமுகம், அல்மாத் தோட்டம் சில வரலாற்றுப் பதிவுகள், குடும்பத்தவரின் இரங்கல் உரைகள், அல்மா சகாக்களின் உணர்வுகள் ஆகிய நினைவுப் பதிகைகளுடன், பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதிய ‘மலையகப் பண்பாட்டுப் பேணுகை: சிக்கல்களும் சவால்களும்’, தை.தனராஜ் எழுதிய ‘மலையகக் கல்வி ஒரு எதிர்கால நோக்கு’, சீ.அ.யோதிலிங்கம் எழுதிய ‘மலையக அரசியல் வரலாற்று வளர்ச்சியும், முன் நகர்த்த வேண்டிய பணிகளும்’ ஆகிய தலைப்புகளிலான மலையகம் சார்ந்த கட்டுரைகளும் மீள்பிரசுரம் செய்யப் பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40003).

ஏனைய பதிவுகள்