12887 உமா கரம்(புற்றுநோய் தவிர்ப்போம் என்ற நூலின் மீள்பிரசுரம்).

சி.உமாகரன். நயினாதீவு: சிவசம்பு உமாகரன் குடும்பத்தினர், திருவாலவாய், 3ஆம் வட்டாரம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2016. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).

(6), 128 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5 x 15 சமீ.

நயினாதீவு-3, அமரர் சிவசம்பு உமாகரன் (31.1.1964-27.1.2016) அவர்களின் நினைவு மலராக வெளிவரும் இந்நூல் ‘புற்று நோய் தவிர்ப்போம்’ என்ற தலைப்பில் கா. வைத்தீஸ்வரன் 2015இல் வெளியிட்ட நூலினை உள்ளடக்கி வெளிவந்துள்ளது. புற்றுநோய்-பொதுவான கண்ணோட்டம், கலங்களின் அசாதாரண வளர்ச்சியே புற்றுநோய், புற்றுநோய் ஆரம்பநிலையில் இனம்காணப்படல் வேண்டும், நோய்க்கெதிரான சிறந்த ஆயுதம் ஆரம்பத்தில் இனம் காண்பதே, நோய் அதிகரிப்புக்கான காரணிகள், கறுப்புப் புள்ளி-ஆரம்ப அறிகுறிகள், தொண்டைகுரல்வளைப் புற்றுநோய், கற்றது கைம்மண் அளவு, களப் புற்றுநோய், வாய்ச் சுகாதாரம், வாய்க்குழிப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோயைக் குறைப்பதற்கான ஐந்து எளிமையான வழிமுறைகள், தைரொயிட் புற்றுநோய், இரத்தப் புற்றுநோய், புற்றுநோய்-உணவுப் பழக்கவழக்கத்திற்கு இடையேயான தொடர்புகள், உணவும் ஒட்சிசனெதிரிகளும், பெருங்குடற் புற்றுநோய், புராஸ்ரேட் புற்றுநோய் ஆகிய 19 அத்தியாயங்களில் எழுதப்பெற்றுள்ள இந்நூலின் இறுதியில் நோய்வாய்ப் பட்டிருக்கும் நண்பருக்கு உதவுவது எப்படி? பித்தப்பை மற்றும் பித்தக்கானில் ஏற்படும் புற்றுநோய், குழந்தைகளில் ஏற்படும் புற்றுநோய் ஆகியவை பின்னி ணைப்புகளாகத் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்