மலர்க் குழு. லண்டன்: சித்தா-மகேஸ் 25ஆவது மணநாள் விழா ஒழுங்கமைப்பாளர்கள், 1வது பதிப்பு, நவம்பர் 2002. (லண்டன்: வாசன் அச்சகம், மிச்செம்).
128 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 15 சமீ.
லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தவர்களான திரு. குமாரசாமி சிதம்பரப்பிள்ளை-மகேஸ்வரி சிதம்பரப்பிள்ளை ஆகியோர் 16.11.2002 அன்று லண்டனில் தமது மணவிழாவின் 25ஆவது ஆண்டை கொண்டாடிய வேளையில் தமது வாழ்வின் மலரும் நினைவுகளை வண்ணப் புகைப்படங்கள் சகிதம் ஆவணப்படுத்தி இச்சிறப்பிதழை வெளியிட்டிருக்கிறார்கள். தமக்கு வழங்கப்பட்ட ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன், தமது குடும்பப் படங்களையும், பல்வேறு பிரமுகர்களுடன் தாம் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பெருமளவில் இம்மலரில் நினைவுப் பதிகையாக இடம்பெறச்செய்துள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48669).