12892 – பன்னாலை-தெல்லிப்பழை அமரர் வ.சி.செல்லையா அவர்களின் சிவபதப்பேறு குறித்து வெளியிடப்பட்ட நினைவுமலர்.

மலர் வெளியீட்டுக் குழு. கொழும்பு 2: வ.சி. செல்லையா நினைவு மலர்க்குழு, சைவ முன்னேற்றச் சங்கம், 101ஃ70, கியூ வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1992. (கொழும்பு 2: ராஜன் பிரிண்டர்ஸ், 31, கியு லேன்).

(10), 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22 x 14.5 சமீ.

29.11.1992 அன்று வெளியிடப்பட்ட இந்நினைவு மலரில் பஞ்சபுராணம், தேவாரப் பதிகங்கள், திருத்தொண்டர் தொகை, சிவபுராணம், திருவாசகம், திருவெம்பாவை, திருப்பொற்சுண்ணம், விநாயகர் அகவல், தேவி வழிபாடுகளான அபிராமி அந்தாதி, சகலகலாவல்லி மாலை என்பனவும், முருகன் வழிபாடுகளான கந்தரநுபூதி, கந்தசஷ்டி கவசம், திருப்புகழ் ஆதியனவும் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34850).

ஏனைய பதிவுகள்

15498 ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்.

இணுவையூர் மயூரன். தமிழ்நாடு: அகநாழிகை, 26, ஜெயராமன் தெரு, கோகுலபுரம், செங்கல்பட்டு 603001, 1வது பதிப்பு, மார்ச் 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை). 128 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 250., அளவு: