மலர்க் குழு. மாதகல்: அமரர் கந்தையா புண்ணியமூர்த்தி நினைவுக் குழு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2016. (யாழ்ப்பாணம்: போஸ்கோ பதிப்பகம். நல்லூர்).
(4), 75 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5 x 15 சமீ.
யாழ்ப்பாண மாவட்டத்தில், மாதகலைச் சேர்ந்த அமரர் கந்தையா புண்ணியமூர்த்தி அவர்களின் அமரத்துவம் குறித்த நினைவுமலர். 02.04.2016 அன்று அமரரின் அந்தியேட்டி நிகழ்வின்போது வெளியிடப்பட்டது. இம்மலரில் பஞ்சபுராணம், திருவெம்பாவைப் பாடல்கள், சரஸ்வதியந்தாதி, மூலமந்திரம், நண்பர்களின் மனப்பதிவு, உறவுகளின் துயர்ப்பதிவு, துன்பங்களிலிருந்து விடுதலை (கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் நூலிலிருந்து சில பகுதிகள்), அந்தியேட்டி (பேராசிரியர் இரா.குமாரவடிவேலின் சைவ அபரக் கிரியைகள் என்ற கையேட்டிலிருந்து சில பகுதிகள்) ஆகியவை இடம்பெற்றுள்ளன.