க.ஆறுமுகம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 13: அமரர் கதிர்காமர் பொன்னம்பலம் நினைவுக்குழு, 62, விவேகானந்த மேடு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1992. (கொழும்பு 2: ராஜன் பிரின்டர்ஸ், 31 கியூ லேன்).
(6), 148 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22 x 14.5 சமீ.
அமரர் கதிர்காமர் பொன்னம்பலம் (19.12.1924-22.07.1992) புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். 21.8.1992 அன்று நடைபெற்ற அன்னாரின் 31ஆம் நாள் நிகழ்வின்போது வெளியிடப்பெற்ற நினைவு மலர் இதுவாகும். பஞ்சபுராணம், தேவாரப் பதிகங்கள், திருவாசகம், விநாயகர் அகவல், தேவி வழிபாடு, முருகன் வழிபாடு, இரண்டாம் சைவ வினா-விடை தொகுப்பு, அபிடேகப் பலன்கள், திருமுறைத் தலங்கள், திருத்தொண்டர் குருபூசை ஆகிய பக்திப்பாமாலைகளின் தொகுப்பாக இம்மலர் அமைந்துள்ளது. இதனை யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்தவரான அவரது சகோதரர் க.ஆறுமுகம் தொகுத்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35627).