12898 – பண்டிதர் ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை.

ம.பா.மகாலிங்கசிவம். கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்கம், 7, 57வது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(8), 68 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 22 x 15 சமீ., ISBN: 978-955-8564-14-1.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிற் புதிதாக எழுத்தறிவாக்கம் பெற்றோரை குவியப்படுத்தி ஆக்கங்ளை மேற்கொண்டோர் வரிசையில் பண்டிதர் மட்டுவில் வே. திருஞானசம்பந்தப்பிள்ளை அவர்கள் தனித்துவமானவர். இவரது எழுத் தாக்கங்களைப் புறந்தள்ளிவிட்டு, இந்நாட்டின் இதழியல் தமிழ் வளர்ச்சியின் அமைப்பையும், அறிகைத் தொழிற்பாடுகளையும், பின்னர் நிகழ்ந்த மாற்றங்களையும் விளங்கிக் கொள்ள முடியாது. இவர் பங்குபற்றி ஆக்கம் செய்த வாசிப்புத் தளத்திலே தான் தமிழகத்திலிருந்து வந்த இலக்கிய வார இதழ்கள் ஆழ்ந்தும் அகன்றும் கால்பதிக்கலாயின. மேலும் யாழ்ப்பாணத்துச் சமய அசைவியக்கத்தை தருக்க நிலையில் விளங்கிக்கொள்வதற்குரிய அறிகைத் தளங்களை உருவாக்கியவர் களுள் இவரது தனித்துவம் மேலேழுகின்றது. இந்த ஆய்வறிவாளரின் பணிகளை ஆழ்ந்து வெளிக்கொண்டு வரும் ஆசிரியர் திரு.ம.பா. மகாலிங்கசிவம் அவர்களின் இந்நூல் நாவலர் பரம்பரையும் மட்டுவிற் கல்விப் பாரம்பரியமும், வாழ்வும் பணிகளும், பத்திரிகாசிரியர், புனைகதையாசிரியர், நாடகாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், வகிபாகம் ஆகிய எட்டு இயல்களில் எழுதப்பட்டுள்ளது. தமிழ்ச்சங்கத்தின் ‘இலங்கைத் தமிழர் வாழ்வும் வகிபாகமும்’ என்ற வெளியீட்டுத் தொடரில் இதுவொரு புது வரவாகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 44288. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 008600).

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

ஏனைய பதிவுகள்