அடியார்க்கடியன் (இயற்பெயர்: தவத்திரு சிவகுருநாதன் அடிகளார்). கொழும்பு 2: தத்துவஞானத் தவச்சாலைப் பிரசுரம், 31ஃ21, டோசன் வீதி, 1வது பதிப்பு, மே 2001. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு).
xii, 82 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 18 x 12 சமீ.
தத்துவஞானத் தவச்சாலைக் காப்பாளரான தவத்திரு சிவகுருநாதன் அடிகளார் உலக நலனுக்காக 42 நாட்கள் நடத்திய மௌனதவம் என்ற ஞானவேள்வியை முடித்த நாளையொட்டி இந்நூல் வெளியிடப்பட்டது. சித்தர் ஸ்ரீ சத்சித்திரமுத்தடி களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் இந்நூல் வெளிவரும் காலகட்டம் அவரது நூற்றாண்டுப் பூர்த்தியடைந்த காலகட்டமுமாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 42711).