12903 – சீரடி சாயிபாபா மகிமை.

திருச்செல்வம் தவரத்தினம். கொழும்பு 12: பீனிக்ஸ் பப்ளிக்கேஷன்ஸ், ழே.ஊ.பு.6, செபஸ்தியன் தொடர்மாடிக் குடியிருப்பு, புனித செபஸ்தியார் வீதி, குணசிங்கபுர, இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: சர்வசக்தி வெளியீடு, சடையாளி, காரைநகர், 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 15: பிரின்ட் ஹவுஸ்).

64 பக்கம், வண்ணத் தகடுகள், விலை: ரூபா 120., அளவு: 21 x 14.5 சமீ., ISBN: 978-955-7226-05-7.

சீரடி வரலாறு, சீரடி பாபாவும் நானும், சீரடி சாயிபாபா ஒன்பது வியாழக்கிழமை விரதமுறை, சீரடி சாயிபாபாவின் உபதேச மொழிகள், சீரடி சாயிபாபாவின் வணக்கப்பாடல்கள், பின்னிணைப்பு- சீரடி சாயிபாபாவின் வர்ணப்படங்கள் ஆகிய ஆறு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சீரடி சாயிபாபா (Shirdi Sai Baba) செப்டம்பர் 28, 1838 இல் பிறந்து அக்டோபர் 15, 1918இல் இறையடி சேர்ந்தவர். மகாராஷ்டிராவில் அகமது நகர் மாவட்டத்தில் சீரடியில் வசித்திருந்த ஓர் இந்திய குரு, யோகி மற்றும் சு‡பி துறவியாவார். இவரை இந்துக்களும் இஸ்லாமியரும் புனித சாமியாராகப் போற்றுகின்றனர். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். இசுலாமியர் பிர் அல்லது குதுப் ஆக நம்புகின்றனர். சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது. சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் அராலி முருகமூர்த்தி வித்தியாலயத்தின் தற்போதைய அதிபருமான திருச்செல்வம் தவரத்தினம் அவர்கள் எழுதிய நூல் இது.

ஏனைய பதிவுகள்