ராஜா திவ்வியராஜன். கொழும்பு 3: ராஜா திவ்வியராஜன், 532, காலி வீதி, கொள்ளுப்பிட்டி, 1வது பதிப்பு, 1980. (கொழும்பு: நிர்மால் அச்சகம், ஜெம்பட்டா).
40 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5 x 21 சமீ.
ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் பணிகளை விதந்துபோற்றும் வகையில் புகைப்படங்களுடன் வெளிவந்துள்ள ஒரு பிரச்சாரப் பிரசுரம் இதுவாகும். ஜூ னியஸ் ரிச்சட் ஜெயவர்தனா (செப்டம்பர் 17 1906 – நவம்பர் 1 1996), இலங்கையின் இரண்டாவது ஜனாதிபதியும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதிபதியுமாவார். வில்லியம் கொபல்லாவவுக்குப் பின்னர் பெப்ரவரி 4 1978 முதல் ஜனவரி 1 1989 வரை இவர் ஜனாதிபதியாகப் பணியாற்றினார். இவரக்குப் பின்னர் ரணசிங்க பிரேமதாசா ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார். இலங்கை யின் சட்டத்துறையில் பிரபலமாக விளங்கிய குடும்பமொன்றில் பிறந்த இவர் ஜனாதிபதிப் பதவியை ஏற்கும் முன் அரசில் பல பதவிகளை வகித்துள்ளார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதோடு அதன் தலைவராகவும் செயலாற்றினார். பத்திரிகைத் துறையில் பிரபலமான டி. ஆர். விஜேவர்தனா (லேக் ஹவுஸ்) இவரது தாய்வழி மாமனாராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10276).