12913 – செயலாளர் செல்லச்சாமி: வாழ்க்கை வரலாறு.

சி.அழகுப்பிள்ளை. மாத்தளை: கவிஞர் சி. அழகுப்பிள்ளை, எல்கடுவ உன்னஸ்கிரிய தோட்டம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம்).

8 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 14.5 சமீ.

இலங்கை அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இலங்கை அமைச்சருமான எம்.எஸ்.செல்லச்சாமி (முத்து சங்கரலிங்கம் செல்லச்சாமி) அவர்களின் வாழ்க்கை வரலாறு இந்நூலில் சுருங்கக் கூறப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் தலைமையில் தன்னை தொழிற்சங்கத் துறையில் ஈடுபடுத்திக்கொண்ட இவர், தொழிலாளர் காங்கிரசில் 35 ஆண்டு காலமாக பொதுக் காரியதரிசியாக சேவை புரிந்தார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளராக மத்திய கொழும்பில் முதன் முதலில் போட்டியிட்டு 24,969 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். பின்னர் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார தேர்தல் முறையில் கொழும்பு மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் 1981 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கொழும்பு மாவட்ட அபிவிருத்தி சபையில் போக்குவரத்து அமைச்சராக நியமனம் பெற்றார். 1989ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் சார்பில் கொழும்பு மாவட்டத் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு 36,820 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அன்றைய அரசாங்கத்தில் சிறு கைத்தொழில்துறை அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக நியமனம் பெற்றார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இரண்டாகப் பிளவு பட்டபோது, செல்லச்சாமி இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தைத் தொடங்கினார். 1994 பொதுத்தேர்தலில் சந்திரிக்கா குமாரதுங்கவின் பொது சன ஐக்கிய முன்னணியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 15,000 வாக்குகளைப் பெற்றும் தோல்வியடைந்தார். அதன் பின்னர் மீண்டும் இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இணைந்து அதன் பிரதித் தலைவரானார். பின்னர் அக்கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் நாடாளு மன்றம் சென்றார். அவரது வாழ்வின் முற்பகுதி வாழ்வின் பதிவாக இந்நூல் அமைந்துள்ளது. வெளியிட்ட ஆண்டு தெரியாத போதிலும், இதில் சொல்லப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 1977க்கு முன்னர் இப்பிரசுரம் வெளியிடப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. மாத்தளை மாவட்டம் எல்கடுவ உன்னஸ்கிரிய தோட்டத்தில் பிறந்தவர் கவிஞர் சி.அழகுப்பிள்ளை. இவரது தந்தையார் தோட்டப் பாடசாலை ஆசிரியராகப் பணி புரிந்தவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10276).

ஏனைய பதிவுகள்

12148 – திருமந்திரம்: ஓர் அறிமுகம்.

செல்லத்தம்பி சிறீக்கந்தராசா. கொழும்பு 6: ஆலயம் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xxviii, 118

14375 சைவ மகாஜன தீபம்: மண்டபத் திறப்பு விழா மலர்-2015.

வே.மதியழகன் (மலராசிரியர்). யாழ்ப்பாணம்: இணுவில் மத்திய கல்லூரி, 1வது பதிப்பு, ஜுன் 2015. (இணுவில்: வைரஸ் பிரின்டர்ஸ்). lvi, 240 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ. இம்மலரில் ஆசிச்

12496 – முதல் உலகத் தமிழாசிரியர் மாநாடு, சிங்கப்பூர் 1992.

இரா.மதிவாணன் (மலர்க்குழு சார்பாக). சிங்கப்பூர்: சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், 1வது பதிப்பு, ஜுன் 1992. (சென்னை: சுனிதா அச்சகம்). (4), 280 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ. சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தினால்

14470 சித்த மருத்துவம் 1990/91.

என்.ஸ்ரீசுப்பிரமணியம் (இதழாசிரியர்), க.ஸ்ரீதரன் (உதவி ஆசிரியர்). யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ மாணவர் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1991. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்). xviii, 64 பக்கம், தகடு, விலை:

12524 – சைவத் தமிழ் திருமணங்கள்: ஓர் கையேடு.

இ.குமாரவடிவேல் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: குருபரன்-ஆரணி திருமணநாள் ஞாபகார்த்த வெளியீடு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி). 44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5