12915 – கரவை ஏ.சீ.கந்தசாமி நினைவுக் கருத்தரங்கு கட்டுரைத் தொகுப்பு.

வி.ரி.தமிழ்மாறன், கொன்சன்ரைன், சோ.சந்திரசேகரம். கொழும்பு: பாரதி வெளியீட்டகம், 1வது பதிப்பு, டிசம்பர் 1995. (தெகிவளை: டெக்னொ பிரின்ட், இல. 6, ஜெயவர்த்தன அவென்யூ).

(4), 28 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 21 x 14 சமீ.

31.12.1994அன்று மறைந்த கரவை ஏ.சீ.கந்தசாமி அவர்கள் பற்றிய மனப்பதிவுகளை – அரசியலில் ஈடுபட்ட மாணவனாக, ஒரு கம்யூனிஸ்டாக, தொழிற்சங்கவாதியாக, அரசியல்வாதியாக எனப் பல்வேறு கோணங்களில் தரிசிக்கப்பட்ட பார்வைகளாகத் திரட்டி லீலா முத்தையா, ஆனந்த குணத்திலக்க, த.சித்தார்த்தன் ஆகியோர் பதிவுசெய்திருக்கிறார்கள். மேலும்ஆய்வுக் கட்டுரைகளாக வி.ரி.தமிழ்மாறன் எழுதிய ‘சிறுபான்மை தேசிய இனங்களின் போராட்டம் 20ஆம் நூற்றாண்டின் 923.3(1) தொழிற்சங்கவாதிகள் 514 நூல் தேட்டம் – தொகுதி 13 இறுதி தசாப்தத்தில் ஒரு பார்வை’ என்ற ஆய்வும், கொன்சன்ரைன் எழுதிய ‘யுத்தமும் சிறுவர் உளவியலும்-ஒரு சமூகவியல் பார்வை’ என்ற கட்டுரையும், சோ.சந்திரசேகரம் எழுதிய ‘வன்முறையும் கல்வியும்’ என்ற கட்டுரையும் இடம் பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10976).

ஏனைய பதிவுகள்

14090 உலக சைவப் பேரவையின் யாப்பு.

உலக சைவப் பேரவை. கொழும்பு: உலக சைவப் பேரவை-இலங்கைக் கிளை, 1வது பதிப்பு, ஜுலை 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 44 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 21.5×14 சமீ. 1998