12917 – வே.ந.சிவராசா நினைவுமலர்.

சச்சிதானந்தம், செ.கணேசலிங்கன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 12: திருமதி கோகிலாம்பாள் சிவராசா, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1993. (அச்சக விபரம் தரப்படவில்லை).

50+156 பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5 x 14 சமீ.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளராகப் பணியாற்றிய வே.ந.சிவராசா அவர்கள் 07.10.1934இல் வடமராட்சியில் துன்னாலை தெற்கில் வேலுப்பிள்ளை நடராசா ஆசிரியரின் தலைமகனாகப் பிறந்தவர். சிறந்த சைவ பக்தரான இவர் காசி முதலான வடஇந்தியத் தலங்களைத் தரிசிக்கச் சென்றவிடத்தில் சுகவீனமற்று சென்னை தனியார் மருத்துவமனையொன்றில் 27.9.1993இல் மரணமனவர். அவர் நினைவாக வெளிவரும் இம்மலரில், மகேச பக்தர் மக்கள் நேசர் (நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம்), அமருங்கள் நீங்கள் யார் எங்கிருந்து வருகின்றீர்கள் (சுவாமி உமாஷங்கரானந்த சரஸ்வதி), சிறந்த கர்மவீரன் (க.கைலாசநாத குருக்கள்), ஓர் ஆத்மீக நிர்வாகி (நந்தி), அன்னார் சேவைகள் மறக்க முடியாதவை (சொ. கணேசநாதன்), சிவநெறிச் சீலர் (வ.சிவராசசிங்கம்), மனிதருள் தலையாய ஒரு மனிதர் (ஆ.குணநாயகம்), கொழும்புத் தமிழ்ச் சங்க அஞ்சலி, ஆன்மீகம்- குடும்பம்-முக்தி, ஆத்மீக ஞானி (கு.குருசாமி), அவருக்கு மரணமில்லை (செ. யோகநாதன்), எல்லாம் சிவமயம் (லோகநாயகி சற்குணநாதன்), இயற்கையின் குரூரம் (செ.கணேசலிங்கன்), தெளிவான சிந்தனையாளர் (சுவாமி ஆத்மானந்தா), பிரார்த்தனையின் பலனுக்கு சிவராஜா அவர்கள் பிரத்தியட்சப் பிரமாணமே (க.சிவானந்தன்), எளிமையாக வாழ்ந்த சிந்தனையாளர் (எஸ்.சிவதாசன்), அவர் மறைந்து விடவில்லை (எம்.சோமசுந்தரம்), (மரணத்திற்குப் பின்) ஆகிய பிரமுகர்களின் அஞ்சலி உரைகளுடன், நல்லூரான் திருவடி, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோரின் தேவாரமும், மணிக்கவாசக சுவாமிகள் திருவாசகம், திருக்கோவையார், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருமந்திரம், அற்புதத் திருவந்தாதி, திருத் தொண்டர் புராணம், அபிராமி அந்தாதி, சகல கலாவல்லி மாலை, சரஸ்வதியந்தாதி, லலிதாம்பிகை நவரத்தின மாலை, விநாயகர் அகவல், விநாயக கவசம், கி.வா. ஜகந்நாதன் விநாயகர் வழிபாடு, அருணகிரிநாத சுவாமிகள் திருப்புகழ், கந்தரநுபூதி, கந்தரலங்காரம், ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, தேவராய சுவாமிகள் கந்தர், சஷ்டி கவசம், திருச்செந்தூர் முருகன், பாம்பன் சுவாமிகள் சண்முக கவசம், திருப்போரூர் சந்நிதி முறை, ஆறுமுக நாவலர் கதிர்காமத் திருமுருகன், இராமலிங்க அடிகளார் திருவருட்பா, கந்தபுராணம் ஆகிய பிற பக்தி இலக்கியங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13601).

ஏனைய பதிவுகள்

online casino free spins

Best casino online Casino online Online casino free spins Er zijn diverse spellen beschikbaar bij online casino’s in Nederland, waaronder gokkasten, tafelspellen zoals roulette en