எம்.ஏ.ரஹ்மான். கொழும்பு 13: இளம்பிறை எம்.ஏ.ரகுமான், அரசு வெளியீடு, 231 ஆதிருப்பள்ளித் தெரு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1972. (கொழும்பு 13: ரெயின்போ பிரிண்டர்ஸ், 231 ஆதிருப்பள்ளித் தெரு).
32 பக்கம், புகைப்படம்,விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 14 சமீ.
கொழும்பு தப்ரபேன் ஹோட்டலில் 1971ம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாள் அனைத்திலங்கைத் தமிழ் எழுத்தாளர் கூட்டமைப்பு, முஸ்லீம் லீக்கின் தலைவராகப் பணியாற்றிய அல்ஹாஜ் தை.அ.செ.அப்துல் காதர் அவர்களுக்கு அவர்தம் சமூகசேவை வெள்ளிவிழா நிறைவின் போது தொண்டர் திலகம் என்ற விருது விங்கி கௌரவித்த வேளையில் அவர் பற்றி வெளியிடப்பட்ட பிரசுரம். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 106/10276).