சமரபாகு சீனா உதயகுமார். வல்வெட்டித்துறை: குபேந்திரா பதிப்பகம், கூனன் தோட்டம், சமரபாகு, 1வது பதிப்பு, மார்கழி 2017. (வவுனியா: துஅச்சுப் பதிப்பகம்).
viii, 36 பக்கம், விலை: ரூபா 170., அளவு: 18.5 x 12 சமீ., ISBN: 978-955-73630-1-1.
சர்வாதிகாரி ஹிட்லரை அடிபணிய வைத்த மாவீரன் செண்பகராமனின் வரலாற்றை சிறியதொரு கைநூலாக்கித் தந்துள்ளார் சமரபாகு சீனா உதயகுமார். உலக மகா யுத்தத்தின்போது செண்பகராமன் தனது எம்டன் கப்பலின் மூலம் வழித்தாக்குதல்களை மேற்கொண்டு எதிரிகளின் கடற் கப்பல்களை மூழ்கடித்து பெரும் வீரதீரச் செயல்கள் புரிந்தவர். அக்காலத்தில் இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் படைகளைத் தாக்கி பெரும் சேதம் விளைவித்த இவர் பர்மாவில் நிலைகொண்டிருந்து ஜப்பானியருடன் இணைந்து தன் தேசிய இராணுவப் போராளிகள் மூலம் காலனித்துவ பிரித்தானியப் படையினரை நிலைகுலைய வைத்துக்கொண்டிருந்த சுபாஷ் சந்திரபோசுக்கு வழிகாட்டியாகவும் உதவியாகவும் இருந்தவர். இவர் எவ்வாறு வரலாற்றின் ஒருகட்டத்தில் ஹிட்லரைத் தன்னிடம் மன்னிப்புக் கேட்கவைத்தார் என்பதும் இச்சிறுநூலில் சுவையாக விளக்கப்பட்டுள்ளது. ஹிட்லரின் நாஜிப் படையினர் இறுதியில் நயவஞ்சகமாக செண்பகராமனுக்கு வழங்கிய உணவில் விஷமிட்டு அவரைக் கொன்றார்கள் என்பதையும் ஆசிரியர் இந்நூலில் பதிவுசெய்திருக்கிறார்.
மேலும் பார்க்க: 13000