மலர்க் குழு. கொழும்பு 4: பழைய மாணவர் சங்கம், இந்துக் கல்லூரி, இல.77, லோரன்ஸ் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1991. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(36) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25 x 18.5 சமீ.
02.16.1929இல் பிறந்து இந்துக்கல்லூரியின் ஆசிரியராகவும் துணையதிபராகவும் 23 ஆண்டுகள் பணியாற்றி 21.6.1989இல் இளைப்பாறியவர் அமரர் சு.பற்குணம். இளைப்பாறிய பின்பும் பாடசாலை அபிவிருத்திச் சபையின் துணைத்தலைவராகப் பணியாற்றி 09.07.1991இல் இறைபதமெய்தியவர். அவரது மறைவையொட்டி அவரது வாழ்வும் பணியும் பற்றிய கருத்துரைகளுடன் இந்நினைவு மலர் உருவாக்கப்பட்டுள்ளது. சிவஸ்ரீ பா.சிற்சபேசக் குருக்கள், கல்லூரி அதிபர் பா.சி. சர்மா, கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.செல்லச்சாமி, கல்வி இராஜாங்க அமைச்சர் இராசமனோகரி புலந்திரன், மேல் மாகாண சபை உறுப்பினர் ராஜன் சின்னத்துரை, இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் வு.சங்கரலிங்கம் பிரதி மாநகர முதல்வர் க.கணேசலிங்கம், இந்துக் கல்லூரி தாபகர் வி.மாணிக்கவாசகர், அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் வே. பாலசுப்பிரமணியம், பொன்னம்பலவாணேசர் கோவில் அறங்காவலர் னு.ஆ. சுவாமிநாதன், செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, க.வேலாயுதபிள்ளை, கந்தையா நீலகண்டன், ரூ.சிவகுருநாதன், க.சேய்ந்தன், க.த.இராஜரட்ணம், தி.கனகலிங்கம் ஆகியோரின் இரங்கலுரைகளும், வளர்ச்சிப் பாதையில் இந்துக் கல்லூரி (சு. பற்குணம்), பற்குணம் மாஸ்டர் அறநிதியம் ஆகிய ஆக்கங்களும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35803. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 004097).