12924 – ஆசிரியமணி:அ.பஞ்சாட்சரம் அவர்களின் பாராட்டுவிழா மலர்.

மலர்க் குழு. உரும்பிராய்: ஆசிரியமணி அ.பஞ்சாட்சரம் அவர்கள் பாராட்டுவிழாச் சபை, சைவத் தமிழ் வித்தியாலயம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2001. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

(44), 46 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24 x 18.5 சமீ.

ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள், மஹாராஜஸ்ரீ சு.து.ஷண்முகநாதக் குருக்கள், தங்கம்மா அப்பாக்குட்டி, அ.சண்முகதாஸ், இ.கந்தையா, சுப்பிரமணியம் யோகராசா, இ.செல்லத்துரை, ச.நா.தணிகாசலம் பிள்ளை, மு.கந்தையா, க.சொக்கலிங்கம், இ.முருகையன், சீ.விநாசித்தம்பிப் புலவர், வ.ஆறுமுகம், க.சச்சிதானந்தன் வ.கந்தசாமி, அ.பஞ்சலிங்கம், எஸ். ஜெபநேசன், செல்வராணி மகாலிங்கம், ம.பார்வதிநாதசிவம், ப.கோபாலகிருஷ்ண ஐயர் ஆகியோரின் வாழ்த்துரைகளுடன் தொடங்கும் இம்மலரில், கவிஞர் சோ. பத்மநாதன், மு.கந்தப்பு (மன்னவன்), சைவப்புலவர் சு.செல்லத்துரை, ந. வீரமணிஐயர், செ.ஐயாத்துரை, சேந்தன், க.ஆனந்தராஜா ஆகியோரின் வாழ்த்துக் கவிதைகளும், கிலேசம் தீர்க்கும் பஞ்சாட்சரம் (இரா.சுந்தரலிங்கம்), குரு சிஷ்ய வழியில் இன்பங் கண்டவர் (இ.சிவஞானசுந்தரம்), ஆசிரியமணி அ.பஞ்சாட்சரம் அவர்கள் (வி.கே.கணேசலிங்கம்), குருபக்தியின் சிகரம் ஆசிரியமணி பஞ்சாட்சரம் (செல்லப்பா நடராசா), நல்லமனம் வாழ்க, நாடுபோற்ற வாழ்க (த.செல்வநாயகம்), நாவலர் (மணியும்), பண்டிதமணியும், ஆசிரியமணியும் (குமாரசாமி சோமசுந்தரம்), ஆசிரியமணியும் பண்டிதமணியும் (பொன்.பாக்கியம்), ஆசிரியமணி அ. பஞ்சாட்சரம் அவர்கள் (க.இ.குமாரசாமி), ‘வாழையடி வாழையென வந்த’ ஆசிரியமரபு (முருக வே.பரமநாதன்-ஆழ்கடலான்), வாழிய பல்லாண்டு (க.இ. சரவணமுத்து), ஈழத்துச் சைவத் தமிழ்க் காவலர் (க.இ.க.கந்தசுவாமி), கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கிறேன் (ஆ.க.ஆறுமுகம்), சைவத்தமிழில் ஆசிரியமணி (ந.கணேசலிங்கம்), குன்றின்மேல் விளக்குப் போன்ற நல்லாசான் (சி.நந்தகுமார்), மதிப்புக்கும் வணக்கத்துக்கும் உரியவர் (சிவ.மகாலிங்கம்), ஆசிரியமணி பஞ்சாட்சரம் அவர்களின் மணி விழாவின் போது மனம் மகிழ்ந்து அளித்த வாழ்த்துரை (மு.விருத்தாசலம்), புகழ் வளர்க (கா.இ.விசாகேசுவரன்), பஞ்சாட்சரம் ஐயா (கா.சிவபாலன்), பண்டிதமணி கண்ட அனுமான் (அம்புஜன்), பண்டித மணிக்குக் கிடைத்த பஞ்சாட்சரம் (எஸ்.டி.சிவநாயகம்), ஆசிரியமணி அ. பஞ்சாட்சரம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு, அநுபந்தம்: யாழ்ப்பாண விவசாயத்துறை சந்தை நோக்கியது ஓர் ஆரம்ப நோக்கு (ப.சிவநாதன்), யாழ்ப்பாணத்து மரபுவழி ஆசிரியத்துவம் (சபா.ஜெயராசா) ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 008773).

ஏனைய பதிவுகள்

Spielsaal Über Handyrechnung Begleichen

Content Kleine Beträge Über Boku Durch Telefonrechnung Bezahlen – spezielle Infos Entsprechend Funktioniert Short message Einzahlung Inoffizieller mitarbeiter Erreichbar Spielsaal? Banken Kooperieren Unter einsatz von

12930 – காசிநாதர் மான்மியம்.

கா.சிவபாலன் (பதிப்பாசிரியர்). சாவகச்சேரி: திரு.க.காசிநாதர் குடும்பம், ‘ஆயம்’, மட்டுவில் வடக்கு, 1வது பதிப்பு, மாசி 2005. (சாவகச்சேரி: திருக்கணிதப் பதிப்பகம், 114, டச்சு வீதி). xlvi, 86 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: