12926 – ஒரு கிராமத்துச் சிறுவனின் பயணம்: எஸ்.எச்.எம். ஜெமீலின் வாழ்வியல்.

ஏ.பீர் முகம்மது, எஸ்.எல்.சியாத் அஹமட் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 2: அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல் பாராட்டு விழாக் குழு, இல. 9, சவுன்டர்ஸ் கோர்ட், இணைவெளியீடு, கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xiv, 408 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 1500., அளவு: 24.5 x 17.5 சமீ., ISBN: 978-955-659-403-4.

தமிழறிஞர் எஸ்.எச்.எம்.ஜெமீல் இலங்கையில் அரச நிர்வாகம், ஆய்வு, எழுத்து, மேடைப்பேச்சு, பன்னூல் வெளியீடு என்று பல்முனைகளில் பிரபல்யம் பெற்றவர். அவரது வாழ்க்கை வரலாற்றினூடாக கல்வி, சமூக, பண்பாட்டு வரலாற்றினைக் கூறும் நூலாக இது அமைந்துள்ளது. முதலாவது இயலான ‘ஓர் அறிமுகம்’, எஸ். எச்.எம்.ஜெமீல் அவர்கள் பற்றி மும்மொழிகளிலும் அமைந்த சுருக்க விபரங்களையும், ‘துளிர்ப்பு’ என்ற இயல் அவரது குடும்பத்தின் ஆறு தலை முறையினரின் வாழையடி வாழையாக வழிவந்த வரலாற்றையும், பல்கலைக்கழக வாழ்வு வரையிலான அவரது பயணத்தையும் பதிவுசெய்கின்றன. ‘மலர்வு’ என்ற இயல் அவரது பரந்துபட்ட சேவைக்களங்களையும், ‘அங்கீகாரம்’ என்ற இயல் அவரைப் பற்றிக் கடந்த அரைநூற்றாண்டுக் காலமாகப் பிறர் எழுதிய 27 கட்டுரைகள், 11கவிதைகள், 27 நூலாய்வு என்பவற்றையும் உள்ளடக்கியுள்ளன. ‘சுவடுகள்’ என்ற இயல் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களின் வாழ்வின் முக்கிய தடங்களையும், ‘அடையாளம்’ என்ற இறுதி இயல் எஸ்.எச்.எம்.ஜெமீல் தொடர்பான 160 புகைப்படங்களையும் உள்ளடக்குகின்றன.

ஏனைய பதிவுகள்

Kansas Online casinos

Posts 2: Perform A free account Withdrawing Profits Immersive Roulette Well-known Casino and you can Betting Guides To have Indian People Just how Is Casinos

13030 நேரலை பத்திரிகையியல் ஓர் அறிமுகம்.

அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை. யாழ்ப்பாணம்: பிஷப் சவுந்தரம் மீடியா சென்டர், இல.891, ஆஸ்பத்திரி வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2015. (யாழ்ப்பாணம்: தாயகம் டிஜிட்டல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அருகில், திருநெல்வேலி).(14), 282 பக்கம், விளக்கப்படங்கள்,