எஸ்.எம்.கமால்தீன். கொழும்பு 9: அகில இலங்கை முஸ்லீம் வாலிபர் சங்கப் பேரவை, 63, ஸ்ரீ வஜிரஞான மாவத்தை, 1வது பதிப்பு, 1990. (கொழும்பு 9: டெவலோ பிரின்ட், 33 அல்பியன் ஒழுங்கை).
32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18 x 12.5 சமீ.
அமரர் கலாநிதி A.M.A.அஸீஸ் அவர்களை நினைவுகூர்ந்து எஸ்.எம்.கமால்தீன் அவர்கள் நினைவுதினங்களின்போது எழுதிய ஐந்து கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்துள்ளது. ‘அந்த ஒற்றைப்பனை வீட்டார்’; (தினகரன் 1975), ‘அறிஞர் அஸீஸும் ஜாமியா நளீமிய்யாவும்’ (தினகரன் 1976), ‘பெண் கல்வித்துறையில் அஸீஸின் பணி’ (தினகரன் 1977), ‘அஸீஸ் கண்ட ஜாமியா நூலகம்’, ‘அறிஞர் A.M.A.அஸீஸ்’ (இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன உரை 1988) ஆகிய கட்டுரைகள் இதில் அடங்குகின்றன. இந்நூல் கொழும்பில் 1950 எப்ரல் 30ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவையின் நாற்பதாவது ஆண்டு நிறைவினையொட்டி வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19334).