12929 – கலாநிதி A.M.A.அஸீஸ்: நினைவுதினக் கட்டுரைகள்.

எஸ்.எம்.கமால்தீன். கொழும்பு 9: அகில இலங்கை முஸ்லீம் வாலிபர் சங்கப் பேரவை, 63, ஸ்ரீ வஜிரஞான மாவத்தை, 1வது பதிப்பு, 1990. (கொழும்பு 9: டெவலோ பிரின்ட், 33 அல்பியன் ஒழுங்கை).

32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18 x 12.5 சமீ.

அமரர் கலாநிதி A.M.A.அஸீஸ் அவர்களை நினைவுகூர்ந்து எஸ்.எம்.கமால்தீன் அவர்கள் நினைவுதினங்களின்போது எழுதிய ஐந்து கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்துள்ளது. ‘அந்த ஒற்றைப்பனை வீட்டார்’; (தினகரன் 1975), ‘அறிஞர் அஸீஸும் ஜாமியா நளீமிய்யாவும்’ (தினகரன் 1976), ‘பெண் கல்வித்துறையில் அஸீஸின் பணி’ (தினகரன் 1977), ‘அஸீஸ் கண்ட ஜாமியா நூலகம்’, ‘அறிஞர் A.M.A.அஸீஸ்’ (இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன உரை 1988) ஆகிய கட்டுரைகள் இதில் அடங்குகின்றன. இந்நூல் கொழும்பில் 1950 எப்ரல் 30ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவையின் நாற்பதாவது ஆண்டு நிறைவினையொட்டி வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19334).

ஏனைய பதிவுகள்

14343 மலாய இலங்கையர் சங்கம் (இலங்கை) யாழ்ப்பாணம்: வெள்ளி விழா 1962.

ஆர். நாகரட்ணம் (பிரதம ஆசிரியர்), ஏ.நாகலிங்கம் (உதவி ஆசிரியர்), ஈ.சபாரத்தினம் (உதவி ஆசிரியர்). யாழ்ப்பாணம்: மலாய இலங்கையர் சங்கம், 1வது பதிப்பு, 1962. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம், பிரதான வீதி). xxx, 112

12174 – முருகன் பாடல்: எட்டாம் பகுதி.

தொகுப்பாளர் குழு. கொழும்பு 11: தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட், 98 ஜிந்துப்பிட்டி தெரு, 1வது பதிப்பு, ஆவணி 1995. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணா சாலை).