12931 – சுவடுகளும் நினைவுகளும்: சில பதிவுகள்.

செ.இளங்குமரன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பேராசிரியர் செ.இளங்குமரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி).

111 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 15 சமீ.

அமரர் கந்தையா செல்லையா அவர்களின் 31ஆம் நாள் (08.12.2012) நினைவு வெளியீடு. இம்மலரில் அமரர் க.செல்லையாவின் கல்விப்பணிகளை ஏ. அருளன்னராஜா, ஏ.பீர் முஹம்மது, வீ.பொன்னம்பலம், எஸ்.எஸ்.மனோகரன், த.கோபாலகிருஷ்ணன், ஞா.ஸ்ரீநேசன், ஈ.பீ.ஆனந்தராசா, பீ.சீ.பக்கீர் ஜவுபர், இ.மாணிக்கராசா, கி.துரைராஜசிங்கம், அ.சிவநேசராஜா, ய.ஜெயராசா, பீ.பூபாலசிங்கம், க.யுவராஜன், தி.கணேசமூர்த்தி, சி.மொனகுரு, க.ஆறுமுகம் ஆகியோர் நினைவுகூர்ந்துள்ளனர். அவரது குடும்பத்தினரின் அஞ்சலிப் பதிவுகளும், அவரது மரண அறிவித்தல்களும், அஞ்சலிப் பிரசுரங்களும் இம்மலரின் இரண்டாவது பிரிவில் தொகுக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்புகளாக அமரரின் சான்றிதழ்கள், அவரது கையெழுத்துப் பிரதி, அவரது பாடக்குறிப்புகள், வம்ச விருட்ச அட்டவணை என்பனவும் நினைவாவணங்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53413).

ஏனைய பதிவுகள்

16735 இரத்த வடுக்கள் (சமூக நாவல்).

செ.கணேசலிங்கன். சென்னை 26: குமரன் பதிப்பகம், 12/3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி 7வது தெரு, வடபழனி, 1வது பதிப்பு, ஜீலை 2013. (சென்னை 26: குமரன் பதிப்பகம், 12/3 மெய்கை விநாயகர்