12933 – தணிகை-பணிநயப்பு மலர்: கல்விப் பணியில் நான்கு தசாப்தங்கள்.

கந்தையா ஸ்ரீகணேசன், சிவகுருநாதன் கேசவன் (பதிப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: கலாநிதி ச.நா.தணிகாசலம்பிள்ளை அவர்களின் பணிநயப்புக் குழு, 1வது பதிப்பு, செப்டெம்பர், 2009.(அச்சக விபரம் தரப்படவில்லை).

(2), 237 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25 x 18.5 சமீ.

வாழ்த்தியல் என்ற முதலாவது பிரிவில் கல்வியியல், சமூகவியல், சமயத்துறை பிரமுகர்களின் வாழ்த்துச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. பதிவியல் என்ற இரண்டாம் பிரிவில் கலாநிதி ச.நா. தணிகாசலம்பிள்ளை அவர்களின் வாழ்க்கைப் பாதையில் ….., குடும்பம் (தணிகை) ஓரு பல்கலைக்கழகம், கலாநிதி நா.த.அவர்கள் பிரதம விருத்தினராக கலந்து கொண்ட நிகழ்வுகள், கலாநிதி நா. த. அவர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகள் போன்ற அவர் சார்ந்த தகவல்கள் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. பொதுவியல் என்ற மூன்றாவது பிரிவில் பல்வேறு ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தமிழ் (மொழி) இலக்கியப் பேறு: ஓர் அறிமுகக் குறிப்பு (கா.சிவத்தம்பி), பொருளாதார அபிவிருத்தியும் அரசும் சந்தையமைப்பும்- இலங்கை அனுபவங்கள் காட்டும் நிலைப்பாடுகள் (ந. பாலகிருஷ்ணன்), கல்வி முகாமைத்துவ வினைப்பாடுகள் (சபா.ஜெயராசா), கைத்தொழில் சமூகங்களின் கல்வி வளர்ச்சி (சோ.சந்திரசேகரன்), மனிதவள முகாமையாளர் என்ற வகையில் பாடசாலை அதிபர் (க.சுவர்ணராஜா), மலையகத்திற்கென்றொரு பல்கலைக்கழகம் சில சிந்தனைகள் (லெனின் மதிவானம்), பிற்பட்ட சோழர் காலத் தமிழகத்தில் நிலமானியம் அதிகாரம் அரண்மனைகள் பேரரசு முகாமை சாசானச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு (செல்லையா கிருஸ்ணராசா), கவிதையென்னும் கலை (சோ.பத்மநாதன்), ஈழத்து இடப்பெயர்வு இலக்கியம் சில அவதானிப்புக்கள் (செ.யோகராசா), வள்ளுவர் வாய்மொழி மாண்பு (மனோன்மணி சண்முகதாஸ்), ஈழத்து நாடக அரங்க மரபில் நா.சுந்தரலிங்கம் (கந்தையா ஸ்ரீ கந்தவேள்), நாகரும் நாகபூமியும் வட இலங்கை பற்றி உடுத்துறையில் கிடைத்த நாணயம் தரும் ஒரு புதிய தகவல் (ப.புஷ்பரட்ணம்), பாடசாலை மாணவிகளின் சீருடை (அகளங்கன்), அரங்கக் கட்டடக்கலை பற்றிய அறிமுகம் (க.திலகநாதன்), சுவாமி விபுலாநந்தரின் நாடக நோக்கு (க.ரகுநாதன்), Challenges in Tertiary Education: Social Science (A.Sanmugadas), My Theatre involvement in English Language Teaching: Improvisations in an impoverished Background (Kandiah Shriganeshan), Appropriate English as a second language class room activity sessions (M.Saravanabava Iyer), English Tuition in Jaffna (Vairamuthu Suntharesan)ஆகிய ஆக்கங்கள் இப்பிரிவில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47472. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 009113)

ஏனைய பதிவுகள்

Content En Güvenilir Bahis Sitesi Hangisi? En Iyi Bahis Sitesi Hangisi? Mostbet Bonus: Promosyon Kodları, Promosyonlar Pin Up Casino Güvenilir Mi? Casino Slot Makineleri Aviator

12505 – வேலாயுதம்: 1895-2010: 115ஆவது ஆண்டு நிறைவுவிழா சிறப்பு மலர்.

சிவா கிருஷ்ணமூர்த்தி (மலர்ஆசிரியர்). கொழும்பு 6: வேலாயுதம் மகா வித்தியாலயம், பழைய மாணவர் சங்கம்-கொழும்பு, 71 v, பீற்றசன் ஒழுங்கை, 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).

The Benefits of Online Dating

Online dating can be described as relatively new method of meeting potential charming partners. Generally, people have mixed activities with that; some have great accomplishment