12935 – பத்மம் (பேராசிரியர் எஸ்.பத்மநாதன் சேவை நயப்பு மலர்).

இரா.வை.கனகரத்தினம். எஸ்.ராஜகோபால், ப.புஷ்பரட்ணம், வி.மகேஸ்வரன் (பதிப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பவானி பதிப்பகம், புத்தூர் கிழக்கு, புத்தூர், 1வது பதிப்பு, 2004. (சென்னை 600035: தமிழ் நிலம், 33, வேங்கடநாராயணன் சாலை, நந்தனம்).

xxxx, 335 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 23 x 18 சமீ.

பேராசிரியர் சி.பத்மநாதனின் 65ஆவது அகவைப் பூர்த்தி நினைவாக வெளியிடப் பட்ட மலர். அவரை வாழ்த்தி வழங்கப்பட்ட உரைகளுடன், தென்-தென்கிழக்காசிய நாடுகளில் கணபதி வழிபாட்டு மரபும் தொன்மையும் (செ.கிருஷ்ணராஜா), சிவன்கோயில் நம்பிக்கைப் பொறுப்பாளர் சண்டேசுவரர் (வ.மகேஸ்வரன்), ஆழ்வார் பாசுரங்களில் திருமால் அவதாரங்கள் (மா.வேதநாதன்), யாழ்ப்பாணத்து சைவசித்தாந்த வளர்ச்சியில் ஞானப்பிரகாசரின் பங்களிப்பு (கலைவாணி இராமநாதன்), இலங்கையில் சமயக் கல்வியும் மனச்சான்று வாசகமும் (ஏ.சத்தியசீலன்), கெடுதி பற்றிய பிரச்சினை சமய மெய்யியல் நோக்கு (க.சிவானந்த மூர்த்தி), சங்கச் சமுதாய மாற்றமும் முருக வழிபாடும் (பெ.மாதையன்), பண்டைத் தமிழகச் சேரிகள் (சு.இராசகோபால்), வன்னிப்பிரதேச கண்ணகி வழிபாட்டில் கோவலன் கூத்து-இலக்கிய சமூக மரபுநிலை நின்ற ஆய்வுகள் (மஇரகுநாதன்), சங்கு-பெயர்களும் சில தொன்மங்களும் (ந.அதியமான்), நச்சினார்க்கினியர் (இ.சுந்தரமூர்த்தி), நாவலரின் பதிப்பு நெறி (இரா.வை.கனகரத்தினம்), தமிழில் பிறமொழிச் சொற்கள்: ஒரு வரலாற்று நோக்கு (சுபதினி ரமேஷ்), இலங்கைத் தமிழர் நிலைமை குறித்த தமிழகக் கவிஞர்களது கருத்துக்கள் (க.அருணாசலம்), மானவச் சக்கரவர்த்திகள் (வெ.வேதாசலம்), குலோத்துங்கன் பிள்ளைத் தமிழில் சோழர்களின் தென்கிழக்காசிய வெற்றிகள் (இ.ஸ்ரீஹரி), இலங்கை வணிகக்குழுக் கல்வெட்டுக்கள்: ஒரு மீள்பார்வை (ஏ.சுப்பராயலு), ஈழத்தமிழர் கட்டடக் கலையின் தோற்றமும் வளர்ச்சியும்: ஒரு மீள்வாசிப்பு (ப.புஷ்பரட்ணம்), செவிவழிச் செய்தியும் வீரராகவப் பெருமாள் கோயிலும் (சொ.சாந்தலிங்கம்), திருவாஞ்சியம்: திருவாஞ்சி நாதர் திருக்கோயில் (பொ.இராசேந்திரன், திருமதி எஸ். பாண்டியம்மாள்), இலங்கையில் நிலவிய இந்து நடன மரபுகள் (கி.பி.1300-1800), பாலசந்தரின் திரைப்படங்கள்: ஒர் பார்வை (துரை மனோகரன்), யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசும் ஹன்டி பேரின்பநாயகமும்: ஒரு மீள்மதிப்பீடு (ச. சத்தியசீலன்), இருபதாம் நூற்றாண்டின் ஐரோப்பிய ஆய்வறிவுச் சிந்தனை இயக்கங்கள் (சி.மௌனகுரு) ஆகிய 24 தமிழ் ஆய்வுக் கட்டுரைகளும், 11 ஆங்கில வரலாற்றுக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37884).

ஏனைய பதிவுகள்

Information Virtual Reel Mapping

Posts Free Guts 10 Free Spins spins no deposit | Prepared to Gamble Multiple Dollars Controls The real deal? Free step three Reel Slots Greatest