12938 – வடமாநிலக் கல்விப் பணிப்பாளர் உயர்திரு இரா.சுந்தரலிங்கம் அவர்களின் மணிவிழா மலர்-1993.

சபா.ஜெயராசா, செ.சோதிப் பெருமாள், பொ.கனகசபாபதி. யாழ்ப்பாணம்: செ.சோதிப் பெருமாள், செயலாளர், மணிவிழாக் குழு, 1வது பதிப்பு, 1993. (கொழும்பு 13: ஆ.டீ.Pசiவெநசளஇ 14, சிறில் சி. பெரேரா மாவத்தை).

(10), 70 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5 x 18 சமீ.

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர், தென் இந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீன முதல்வர், யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட குருமுதல்வர், திரு கா. மாணிக்கவாசகர், திரு அ.துரைராசா, துர்க்கா துரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி ஆகியோரின் ஆசியுரைகளுடன் தொடங்கும் இம்மலரில் தளரில் பெரும் செல்வக் கல்வியாளர் (நா.வி.மு.நவரத்தினம்), சுடர்மணிச் சுந்தரர் வாழ்க (சு.செல்லத்துரை) ஆகிய கவிதைகளுடன் நவீன கல்விக் காட்டுருக்களும் திரு. இ.சுந்தரலிங்கத்தின் கல்விப் பணிகளும் (சபா.ஜெயராசா), திருமுருகன் திருமணம் (சி.கணபதிப்பிள்ளை), இலங்கையில் கல்வி-சில அவதானிப்புக்கள் (பொ. பாலசுந்தரம்பிள்ளை), யாழ்ப்பாணத்தில் சைவக் கல்வியின் மறுமலர்ச்சியின் அடிப்படைக் கருமவீரர்கள் (வ.ஆறுமுகம்), நாவலரின் மானுட விழுமியங்கள் (கு.சோமகந்தரம்), விஞ்ஞானக் கல்வி விருத்திக்கு உதவும் பள்ளிப்புறச் செயல்கள் (க.சின்னத்தம்பி), ஆரம்பமட்டத்து மாணவரும் விஞ்ஞானம் கற்பித்தலும் (செல்வி சு.அருளானந்தம்), சமூக முன்னேற்றத்தில் பரீட்சைகளின் பங்கு (மா.சின்னத்தம்பி), நிகழ்த்தத் தக்கவையும் ஐந்தொகைத் திகதிக்குப் பின்னரான நிகழ்வுகளும் இலங்கை கணக்கியல் நியமம் – 12 (கந்தையா தேவராஜா), தமிழிசை (பொன். தெய்வேந்திரன்), இணுவைப் பெரும்பதி (சோ.பரமசாமி) ஆகிய கட்டுரைகளும் முக்கிய இடம்பெறுகின்றன. நூலின் இறுதியில் மணிவிழா நாயகர் வரலாறு, மணிவிழா அமைப்புகள், மணிவிழா மலர் மலரவைத்த உள்ளங்கள் ஆகிய பதிவுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13520. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 009336).

ஏனைய பதிவுகள்