ச.அம்பிகைபாகன். யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 226, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1978. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம்).
x, 94 பக்கம், புகைப்படத் தகடு, விலை: ரூபா 20.00, அளவு: 18 x 12.5 சமீ.
இந்நூல் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வர கல்லூரி முன்னாள் அதிபரும் தமிழறிஞருமான ச.அம்பிகைபாகன் அவர்களால் எழுதப்பட்டது. ஆனந்த குமாரசுவாமி (22.08.1877- 09.09.1947) அவர்களின் வாழ்வும் பணிகளும் பற்றிய தகவல்களை இந்நூல் தருகின்றது. குடும்ப விளக்கை ஏற்றிவைத்தவர், தந்தையும் தாயும், தாயின் அரவணைப்பில் கல்வி, இலங்கையில் கனிப்பொருள் ஆராய்ச்சியும் கலையில் ஆர்வம் அரும்புதலும், இலங்கை சமூக சீர்திருத்தச் சபை, யாழ்ப்பாணத்தில் ஆனந்தகுமாரசுவாமி, இந்தியாவும் இலங்கையும், இந்திய விடுதலை இயக்கமும் சுதேசியமும், இந்தியக் கலையின் நோக்கங்களும் செயல்முறைகளும், இங்கிலாந்திலும் இந்தியாவிலும் நூல்கள் வெளியிடுதல்: கலைக் காட்சிகள் நடத்தல், அமெரிக்காவில் கலைப்பணியும் தத்துவ ஆராய்ச்சியும், வித்தகர் புகழுடம்பு எய்துதல் ஆகிய தலைப்புகளில் அமைந்த 12 இயல்களில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. இவை முன்னர் ஈழநாடு வாரமலரில் தொடராகப் பிரசுரிக்கப்பட்டன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21567. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 007235)