12946 – சோமாஸ்கந்தம் நினைவுமலர் 2003.10.26.

மலர்க் குழு. உடப்பு: நவ இளங்கதிர் நாடக மன்றம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை).

60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5 x 15 சமீ.

தனது வில்லிசை வல்லமையால் இலங்கையில் மாத்திரமன்றி, தமிழகம், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய அயல்தேசங்களிலும் ரசிகர்களைப் பெற்றிருந்தவர் பெரி. சோமாஸ்கந்தர் ஆசிரியர் அவர்களாவார். சமயத் தொண்டனாக, கவிஞனாக, வில்லிசைக் கலைஞனாக, மேடைப் பேச்சாளனாக, ஆசானாக, பாடசாலை அதிபராக, பாடகராக, நாடக நடிகராக, கதாசிரியராக, எனப் பல்பரிமாணங்களில் மக்களின் இதயத்தைக் கவர்ந்தவர். தான் பிறந்த மண்ணின் பெருமையைத் தான் சென்றவிடமெல்லாம் கொண்டுசேர்த்தவர். இம்மலர் அவரது வாழ்க்கை வரலாற்றையும், அவரது மெய்யன்பர்களால் எழுதப்பட்ட புகழுரைகள், நினைவுரை கள், மலரும் நினைவுகளின் பகிர்வுகள், கண்ணீர் அஞ்சலிப் பாக்கள், எனப் பல்வேறு ஆக்கங்களையும் அவர் விரும்பி ஓதும் திருப்பதிகங்களையும் உள்ளடக்கி வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32142).

ஏனைய பதிவுகள்

On the internet

Posts Exactly what Casinos Give 30, 40, fifty, sixty, 70, 80 Lb Bonus? Deposit ten Play with 70 Gambling establishment Playojo How C20 Deposit Casino

11143 சைவ நெறி: ஏழாம் வகுப்பு.

வே.வல்லிபுரம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், புதிய செயலகம், திருத்திய 2வது பதிப்பு, 1981, 1வது பதிப்பு, 1976. (கொழும்பு: திசர அச்சகம்). viii, 116 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,