12946 – சோமாஸ்கந்தம் நினைவுமலர் 2003.10.26.

மலர்க் குழு. உடப்பு: நவ இளங்கதிர் நாடக மன்றம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை).

60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5 x 15 சமீ.

தனது வில்லிசை வல்லமையால் இலங்கையில் மாத்திரமன்றி, தமிழகம், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய அயல்தேசங்களிலும் ரசிகர்களைப் பெற்றிருந்தவர் பெரி. சோமாஸ்கந்தர் ஆசிரியர் அவர்களாவார். சமயத் தொண்டனாக, கவிஞனாக, வில்லிசைக் கலைஞனாக, மேடைப் பேச்சாளனாக, ஆசானாக, பாடசாலை அதிபராக, பாடகராக, நாடக நடிகராக, கதாசிரியராக, எனப் பல்பரிமாணங்களில் மக்களின் இதயத்தைக் கவர்ந்தவர். தான் பிறந்த மண்ணின் பெருமையைத் தான் சென்றவிடமெல்லாம் கொண்டுசேர்த்தவர். இம்மலர் அவரது வாழ்க்கை வரலாற்றையும், அவரது மெய்யன்பர்களால் எழுதப்பட்ட புகழுரைகள், நினைவுரை கள், மலரும் நினைவுகளின் பகிர்வுகள், கண்ணீர் அஞ்சலிப் பாக்கள், எனப் பல்வேறு ஆக்கங்களையும் அவர் விரும்பி ஓதும் திருப்பதிகங்களையும் உள்ளடக்கி வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32142).

ஏனைய பதிவுகள்

14511 சோனக அரங்கு: உரையாடல்.

A.B.M .இத்ரீஸ் (பதிப்பாசிரியர்). வாழைச்சேனை 05: காகம் (உயிர்ப்பைத் தேடும் வேர்கள்) வெளியீடு, மஹ்மூட் ஆலிம் தெரு, 1வது பதிப்பு, 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 127 பக்கம்,

12524 – சைவத் தமிழ் திருமணங்கள்: ஓர் கையேடு.

இ.குமாரவடிவேல் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: குருபரன்-ஆரணி திருமணநாள் ஞாபகார்த்த வெளியீடு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி). 44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5

14388 வணிகக் கல்வி பாடத்திட்டம்: கல்விப்பொதுத் தராதரப் பத்திரம் (உயர்தரம்): தரம் 12,13.

தேசிய கல்வி நிறுவகம். மகரகம: வணிகக் கல்வித்துறை, விஞ்ஞான தொழினுட்பப் பீடம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2017. (மஹரகம: அச்சகம், தேசிய கல்வி நிறுவகம்). ix, 85 பக்கம், விலை: ரூபா

12770 – மேல் மாகாணத்தின் இரண்டாவது தமிழ் சாகித்திய விழா 2010: சிறப்பு மலர்

விசு கருணாநிதி (மலராசிரியர்). மேல் மாகாணம்: போக்குவரத்து, விளையாட்டு, இளைஞர் விவகார, கலை கலாசார அலுவல்கள் கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் கிராம அபிவிருத்தி அலுவல்களுக்கான அமைச்சு, 1வது பதிப்பு, 2010.

14080 வைரவர் வழிபாடு.

திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, ஜுன் 2014. (யாழ்ப்பாணம்: ரூபன் பிரின்டர்ஸ், ஆனைக்கோட்டை). 88 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 125.00, அளவு: 18.5×12.5 சமீ.