12948 – இலங்கை முற்போக்கு இலக்கிய எழுத்தாளர்கள்.

நீர்வை பொன்னையன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இல.18/6/1, கொலிங்வுட் பிளேஸ், 2வது பதிப்பு, ஜனவரி 2017, 1வது பதிப்பு, 2016. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, புகையிரத நிலைய வீதி).

xxiv, 327 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 20 x 14 சமீ., ISBN: 978-955-

இப்பாரிய தொகுப்பில் எம்மிடையே வாழ்ந்தவர்களும், வாழ்ந்து வருபவர்களுமாக மொத்தம் 40 ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களை இனம்கண்டு அவர்கள் பற்றிப்பிற அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார் நீர்வை பொன்னையன். சி.வி.வேலுப்பிள்ளை 1914-1984 (லெனின் மதிவானம்), கே.கணேஷ் 1920-2004 (லெனின் மதிவானம்), அ.ந.கந்தசாமி 1924-1968 (ஏ.இக்பால்), கே.டானியல் 1925-1986 (சி.மௌனகுரு), கவிஞர் பசுபதி 1925-1965 (ந.ரவீந்திரன்), அகஸ்தியர் 1926-1995 (லெ.முருகபூபதி), சுபைர் இளங்கீரன் 1927- 1997 (செ.யோகராசா), பிரேம்ஜி ஞானசுந்தரம் 1930-2014 (லெனின் மதிவானம்), காவலூர் இராஜதுரை 1931-2014 (லெ.முருகபூபதி), எச்.எம்.பி.முஹிதீன் 1932-1988 (நீர்வை பொன்னையன்), கா.சிவத்தம்பி 1932-2011 (சபா ஜெயராசா), முகம்மது சமீம் 1933-1988 (லெனின் மதிவானம்), க.கைலாசபதி 1933-1982 (சபா ஜெயராசா), நா.சோமகாந்தன் 1933-2006 (வசந்தி தயாபரன்), சில்லையூர் செல்வராசன் 1933- 1995 (எம்.ஏ.நு‡மான்), சுபத்திரன் தங்கவடிவேல் 1935-1979 (சித்திரலேகா மௌனகுரு), கவிஞர் முருகையன் 1935-2009 (ந.ரவீந்திரன்), ப.ஆப்டீன் 1937-2015 (திக்குவல்லை கமால்), யோ.பெனடிக்ட் பாலன் 1939-1997 (செ.யோகராசா), இ.சிவானந்தன் 1941-1995 (செ.யோகராசா), செ.யோகநாதன் 1941-2008 (ஐ. சாந்தன்), கே.விஜயன் 1943-2016 (லெனின் மதிவானம்), சாருமதி க.யோகநாதன் 1947-1998 (சி.மௌனகுரு), ராஜஸ்ரீகாந்தன் 1948-2004 (திக்குவல்லை கமால்), செ.கணேசலிங்கன் 1928- (சபா.ஜெயராசா), டொமினிக் ஜீவா 1927- (எம்.எஸ். தேவகௌரி), என்.கே.ரகுநாதன் 1929- (எம்.கே.முருகானந்தன்), நீர்வை பொன்னையன் 1930- (சபா ஜெயராசா), சி.தில்லைநாதன் 1937- (வ.மகேஸ்வரன்), ஏ.இக்பால் 1938- (தர்காநகர் ஸபா), சபா ஜெயராசா 1940- (வ.மகேஸ்வரன்), தெணியான் 1942- (வசந்தி தயாபரன்), மருதூர்க்கனி 1942- (ஏ.இக்பால்), செ.கதிர்காமநாதன் 1942- (எம்.கே.முருகானந்தன்), மு.கனகராசன் 1942- (திக்குவல்லை கமால்), சி.மௌனகுரு 1943- (எம்.ஏ.நு‡மான்), எம்.ஏ.நு‡மான் 1944- (வ.மகேஸ்வரன்), ஐ.சாந்தன் 1947- (எம்.எஸ்.தேவகௌரி), திக்குவல்லை கமால் 1950- (ந..ரவீந்திரன்), லெ.முருகபூபதி 1951- (வசந்தி தயாபரன்) ஆகிய எழுத்தாளர்களின் வாழ்வும் பணியும் பற்றிய தகவல்கள் இக்கட்டுரைகளில் காணமுடிகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61508).

ஏனைய பதிவுகள்

Descargar App Codere México

Descargar App Codere México Codere Mx App: Descarga, Funciones Y Acciones Disponibles Content ¿cuál Es La Diferencia Entre Las Apuestas Simples Y Las Múltiples? Cómo

14965 பிரித்தானியாவின் புதிய அடிப்படை வரலாறு: நான்காம் பகுதி 1688-1939.

சோச்சு தவுண்சென் உவாணர், சி.என்றி கே. மாட்டின், டி.எசுகின் மூர் (ஆங்கில மூலம்). இந்திரா மகாதேவா, கா.பத்மநாதன் (தமிழாக்கம்). கொழும்பு 7: வெளியீட்டுப் பிரிவு, அரச கரும மொழித் திணைக்களம், 1வது பதிப்பு, 1960.