12950 – சதாவதானி நா.கதிரைவேற்பிள்ளை.

ஸ்ரீ பிரசாந்தன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 67 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5 x 14.5 சமீ., ISBN: 978- 955-659-558-1.

யாழ்ப்பாணம், புலோலியில் 1871இல் பிறந்தவர் நாகப்பிள்ளை கதிரவேற்பிள்ளை. இளமையிலேயே சுறுசுறுப்பும் ஞாபகசக்தியும் மிகுந்தவராக காணப்பட்ட இவர், வித்தியாரம்பம் செய்யப்பட்ட பின்னர் ஊரிலிருந்த ஒரு பாடசாலையிலே கல்வி யினைத் தொடர்ந்தார். வறுமையின் காரணமாய் தொடர்ந்து கற்க முடியாமையால் ஆறாம் வகுப்புடன் பாடசாலைக் கல்வியினை நிறுத்திக்கொண்டார். பின்னர் சிதம்பரப்பிள்ளை எனும் நொத்தரிசுக்கு உதவியாளராய் வேலைக்குச் சேர்ந்து கொண்டார். சிறிது காலத்தின்பின் தமிழ்நாடு சென்று தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளையும் சிறப்புறக் கற்றார். அங்கே அவர் திருகோணமலை கனகசுந்தரம்பிள்ளையையும் சந்தித்து தொல்காப்பியத்தினையும் அவரிடம் திரிபறக் கற்றார். சங்க இலக்கியங்களையும் கேட்டறிந்தார். பிற்கால இலக்கியங் களிலும் தன் புலமையினை வளர்த்துக்கொண்டார். கதிரவேற்பிள்ளை கூர்மபுராணம் மற்றும் பழனித் தலபுராணம் என்பவற்றிற்கு உரையும் செய்துள்ளார். சைவசந்திரிகை, சைவசித்தாந்தம் எனும் நூல்களையும் செய்துள்ளார். இவர் செய்த அகராதி யாழ்ப்பாண அகராதி என வழங்கப்படுகின்றது. இவர் மாயாவாதிகளை கண்டிப்பதில் முன்னிற்பவர். அதனால் வித்துவான்கள் பலரும் காசிவாசி செந்திநாதையர் தலைமையிற்கூடி இவருக்கு ‘மாயாவாததுவம்சகோளரி’ என்றொரு பட்டத்தினை வழங்கினார்கள். இராமலிங்க சுவாமிகள் பாடிய பாடல்கள் அருட்பாக்கள் அல்லவென்றும் அவை மருட்பாக்கள் என்றும் எழுதிய கண்டனங்கள் காரணமாய் சென்னை நீதிமன்றில் 1904 மார்கழியில் நடந்த விவாதத்திலே கதிரவேற்பிள்ளை அவர்கள் வெற்றிபெற்றார்கள். அட்டாவதானம், சதாவதானம் செய்வதிலும் கதிரவேற்பிள்ளை வல்லவர். இதனால் அவர் பெயர் சதாவதானி ந. கதிரவேற்பிள்ளை என வழங்குவதாயிற்று. திரு. வி. உலகநாத முதலியார், திரு. வி. கலியாணசுந்தர முதலியார் என்போர் இவர் மாணக்கருள் குறித்துச் சொல்லப்படக் கூடியவர்கள். புலோலி சதாவதானி. ந. கதிரவேற்பிள்ளை அவர்கள் 1907ம் ஆண்டிலே சிவனடி சேர்ந்தார். குமரன் பதிப்பகத்தின் இலங்கைத் தமிழ்ச் சுடர்மணிகள் வரிசையில் 22ஆவதாக வெளிவந்துள்ள இந்நூல், வாழ்க்கைப் பின்புலம், பேச்சாளர், கண்டன அறிஞர், திருமுறைக் காவலர், அகராதிச் செல்வர், உரையாசிரியர், வசனநடை வல்லார், மரபுக்கவிஞர், பதிப்பாசிரியர், நல்லாசிரியர், சதாவதானி, மதிப்பீடு ஆகிய 12 தலைப்புகளில் அவரது வாழ்வும் பணிகளும் இங்கு சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்புகளாக கால வரிசையில் கதிரைவேற்பிள்ளை வரலாறு, கதிரைவேற்பிள்ளை நூற்பட்டியல் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

12020 – அகமலர்ச்சி.

சுவாமி சின்மயானந்தா (ஆங்கில மூலம்), பிரமச்சாரி வியக்த சைதன்யா (தமிழாக்கம்). கொழும்பு 3: சின்மயா மிஷன், எண்.15, மைல்போஸ்ட் அவென்யூ, 1வது பதிப்பு, பதிப்பு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன்

12285 – அமைதியான சமாதானத் தூதுவர்: ஆசிரியர்களுக்குச் சமர்ப்பணம்.

எஸ்.சந்திரசேகரம் (தொகுப்பாசிரியர்), பீ.எஸ்.சர்மா (தமிழாக்கம்). பத்தரமுல்ல: ஸ்ரீலங்கா யுனெஸ்கோ தேசிய சபை, இசுருபாய, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம். 21 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×24.5 சமீ.

14263 பால்நிலை சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம்.

ஜோ.கருணேந்திரா, து.கௌரீஸ்வரன், சு.நிர்மலவாசன், சி.ஜெயசங்கர், கமலாவாசுகி (தொகுப்பாசிரியர் குழு). மட்டக்களப்பு: மூன்றாவது கண், உள்ளூர் அறிவுத்திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழு, இல.30, பழைய வாடிவீட்டு வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2014. (அச்சக விபரம்

12252 – பொருளியல்: இரண்டாம் பகுதி.

W.D.லக்ஷ்மன், H.M.குணசேகர, C.W.பர்ணாந்து. கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1979. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). (4), 102 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

13A17 – நம் முன்னோராளித்த அருஞ்சிச்செல்வம் மூன்றாம் பாகம் : இலங்கை சரித்திரமும் உலக சரித்திரமும்.

ஜீ.ஸி.மெண்டிஸ், எஸ்.ஏ.பேக்மன். கொழும்பு: கொழும்பு அப்போத்திக்கரிஸ் கம்பெனி லிமிற்றெட், 84, பிரதான வீதி, பெட்டா, 2வது பதிப்பு, 1955, 1வது பதிப்பு, 1951. (கொழும்பு: அப்போத்திக்கரிஸ் கம்பெனி லிமிட்டெட், குமார வீதி, கோட்டை). xi,

12776 – தேடலின் வலி (கவிதைகள்).

ரமேஷ் வவுனியன். ஜேர்மனி: ரமேஷ் வவனியன், 1வது பதிப்பு, ஜனவரி 2017. (வவுனியா: கலைமகள் அச்சகம், இல. 50, சந்தை சுற்றுவட்ட வீதி). 94 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5 x 12.5