12952 – பண்டிதர் சி.அப்புத்துரை: ஓர் ஆய்வு.

கலைமதி மகேஸ்வரன். யாழ்ப்பாணம்: பண்டிதர் சி.அப்புத்துரை பவளவிழாச் சபை, இளவாலை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2003. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம், இணுவில்).

xvi, 48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20 x 14 சமீ.

23.4.2003இல் பவளவிழாக் காணும் பண்டிதர் சி.அப்புத்துரை அவர்களின் நினைவாக இந்நூல் வெளியிடப்பெற்றுள்ளது. திருமதி கலைமதி மகேஸ்வரன் அவர்கள் இந்நூலில் பண்டிதர் சி.அப்பத்துரை அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவுசெய்திருப்பதுடன் அவர் இதவரை எழுதியுள்ள நூல்களை விரிவாகப் பட்டியலிட்டுள்ளார். அத்துடன் பண்டிதர் சி.அப்புத்துரை அவர்களை ஒரு கல்விப்பணியாளராக, ஆக்க இலக்கிய கர்த்தாவாக, பேச்சாளராக, கட்டுரையாளராக, மதிப்பீட்டுரை வழங்குவதில் வல்லவராக எனப் பல்பரிமாணங்களில் இனம்கண்டு தன் அவதானிப்பை தனித்தனி இயல்களாக வகுத்து விரிவாக ஆய்வு செய்துள்ளார். அவ்வகையில் பண்டிதர் சி.அப்புத்துரை அவர்களின் வாழ்வும் அறிவியல்பணிகளும் இந்நூலில் விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28983).

ஏனைய பதிவுகள்