12953 – மதுரகவி இ.நாகராஜன் அவர்கள் நினைவுமலர்.

வி.கந்தவனம் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: யாழ். இலக்கிய வட்டம், 1வத பதிப்பு, செப்டெம்பர் 1972. (சுன்னாகம்: மு.சபாரத்தினம், மகாமையாளர், திருமகள் அழுத்தகம்).

27 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18 x 11.5 சமீ.

மதுரகவி இ.நாகராஜன் (17.9.1927-15.8.1972) அவர்களின் மறைவையொட்டி வெளியிடப்பட்ட நினைவுமலர் இது. யாழ்.இலக்கிய வட்டத்தினால் 14.9.1972 அன்று வெளியிடப்பட்ட இம்மலரில் அமரர் இ.நாகராஜனின் வாழ்க்கை வரலாற்றினை கவிஞர் வி.கந்தவனம் அவர்கள் எழுதியுள்ளார். தொடர்ந்து உரைகளை இரசிகமணி கனக செந்திநாதன், சசிபாரதி சபாரத்தினம் ஆகியோர் வழங்கியுள்ளனர். நினைவஞ்சலிக் கவிதைகளை சீ.வினாசித்தம்பி, விகந்தவனம், செ.கதிரேசபிள்ளை, காரை.செ.சுந்தரம்பிள்ளை, வே.ஐயாத்துரை, நா.ஆறுமுகம், ம.பார்வதிநாதசிவம் ஆகியோர் எழுதியுள்ளனர்.

ஏனைய பதிவுகள்