12956 – வானுறையுந் தெய்வம்: அமரர் கலாநிதி க.செ.நடராசா நினைவுமலர்.

வி.கந்தவனம் (தொகுப்பாசிரியர்). ரொறன்ரோ: கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், 1வது பதிப்பு, 1994. (கனடா: சங்கர் அச்சகம்).

28 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28 x 21 சமீ.

நாவற்குழியூர் நடராஜன் (ஜுன் 30, 1919 – பெப்ரவரி 17, 1994) எனப்படும் கலாநிதி கனகசபை செல்லப்பா நடராசா மரபுவழிக் கவிஞரும், ஆசிரியரும், எழுத்தாளருமாவார். இவர் இலங்கை வானொலி தமிழ்ச் சேவைப் பணிப்பாளராகப் பணியாற்றியவர். யாழ்ப்பாண மாவட்டம் நாவற்குழியில் பிறந்த இவர், தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் யாழ்ப்பாண சரித்திரத்தைக் கூறும் வையாபாடல் என்னும் செய்யுள் நூலை ஆராய்ந்திருந்தார். ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றை ஆராய்ந்து உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துமிருந்தார். முதுபெரும் எழுத்தாளர் வரதருடன் இணைந்து மறுமலர்ச்சிச் சங்கத்தை நிறுவி மறுமலர்ச்சி என்னும் மாத இதழை வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார். நடராசன் கொழும்பு ரோயல் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் அவரது நண்பர் சானாவின் வேண்டுகோளின் பேரில் 1951 இல் இலங்கை வானொலியில் பேச்சுப் பகுதியில் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் 1953 இல் அப்பகுதியின் பொறுப்பாளராகப் பணியுயர்வு பெற்றார். அதன் பின்னர் தமிழ் நிகழ்ச்சி அமைப்பாளராகவும் பணியாற்றினார். 1960 சிலம்பொலி என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்ட இவரது கவிதைகள் பல இலங்கை வானொலியில் மெல்லிசைப் பாடல்களாக ஒலிபரப்பாகியுள்ளன. இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவைப் பணிப்பாளராக இருந்து 1978 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற பின்னர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக 1980 வரை இருந்து சேவையாற்றினார். தனது ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய ‘ஈழத்து தமிழ் இலக்கிய வரலாறு: 18ஆம் நூற்றாண்டு வரை’ என்னும் நூல் 1982 இல் வெளியிடப்பட்டது. தனது வாழ்வின் இறுதிக் காலத்தை தனது பிள்ளைகளுடன் கனடாவில் கழித்து 1994 இல் கனடாவில் காலமானார். கனடாவில் வசித்த போதும் இவர் அறு நூற்றுக்கு அதிகமான பாடல் கொண்ட ‘உள்ளதான ஓவியம்’ என்னும் காப்பியத்தை எழுதி முடித்தார். இந்நூல் இவர் இறந்த பின்னர் வெளிவந்தது. ‘ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி’ என்ற இவரது நூலுக்கு இலங்கை சாகித்திய மண்டலத்தின் பரிசு கிடைத்தது. அமரர் க.செ.நடராசாவின் இழப்பிற்கான அஞ்சலிக் கட்டுரை களும், உரைகளும், கவிதைகளும் கொண்டதாக இம்மலர் தொகுக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14186).

ஏனைய பதிவுகள்

Impressive Technologies just for Audit

Innovative solutions are changing the examine landscaping. These advanced tools happen to be allowing auditors to access and leverage vast value packs of customer data