12957 – வித்துவான் வேலன் நினைவலைகள்: சாவினை வென்றவன் வேலன் அறிவையோ.

வித்துவான் க.ந.வேலன் நினைவுக் குழு. லண்டன்: வித்துவான் க.ந.வேலன் நினைவுக் குழு, 66, Westrow Garden, Seven King, Illford, Essex IG3 9NF, 1வது பதிப்பு, ஜுலை 2003. (லண்டன்: ஜே.ஆர்.பிரின்ட்).

(2), 30 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 14.5 சமீ.

வித்துவான் க.ந.வேலன் (இயற்பெயர்: கதிர்காமர் நல்லதம்பி இரத்தினவேல் 06.11.1923-07.06.2003) அவர்களின் மறைவின் நினைவுப்பதிகை, 19.07.2003 அன்றைய அந்தியேட்டி நிகழ்வின்போது வெளியிட்டு விநியோகிக்கப்பட்டது. வேலன் வாழ்க்கைக் குறிப்புக்கள், Last Will of Vidvan Velan, வேலன் விருப்பாவணம் (வித்துவான் க.ந.வேலன்), தமிழ் சாவதில்லை நீயும் சாகவில்லை (கவிமலர்- பார்கவி), வித்துவான் வேலனின் உள்ளத்தின் உள்ளே நின்ற குருநிலை ஆசிரியர்கள், வித்துவான் வேலனின் உள்ளத்தில் நின்ற கல்லூரி அதிபர்கள், வித்துவான் வேலனின் உள்ளத்தில் நின்ற உடன் ஆசிரியர்கள், வித்துவான் வேலனின் அன்பு மாணவர்கள், வித்துவான் எழுதியவைகள், வித்துவானின் முத்துக்கள் சில, வித்துவான் விரும்பிய இலக்கியச் செய்யுள்கள், சத்தியமுணர்ந்தபேர்க்குச் சாவென்ற ஒன்றுமுண்டோ?(கனடா, எஸ்.திருச்செல்வம்), சிறந்த ஒரு தமிழ் மனிதன் (க.வி. விக்கினேஸ்வரன்) ஆகிய ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

16565 மணிக்கவிகள்.

வி.கந்தவனம். கனடா: கவிஞர் வி.கந்தவனம் மணிவிழாக் குழு, ரொறன்ரோ, ஒன்ராரியோ, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1994. (அச்சக விபரம் தரப்படவில்லை). 16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×11.5 சமீ. கவிஞர் வி.கந்தவனம் அவர்களின்