12958 – விபுலாநந்த அடிகளார் நூற்றண்டுவிழா-சிறப்பு வெளியீடு (ஆய்வு கட்டுரைத் தொகுதி).

கி.விசாகரூபன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: தமிழ் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1992. (யாழ்ப்பாணம்: முல்லை அச்சகம், ஆடியபாதம் வீதி, நல்லூர்).

(12), 82 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24 x 18 சமீ.

சுவாமி விபுலாநந்தர் (மார்ச் 27, 1892-ஜூலை 19, 1947) கிழக்கிலங்கையில் பிறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பெரும் தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்தவர். அன்னாரின் 100ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புத்திஜீவிகளினால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். இதில் சுவாமி விபுலாநந்தர்-ஒரு கல்வி நோக்கு (வ.ஆறுமுகம்), தமிழ் உரைநடை வரலாற்றிலே விபுலாநந்த அடிகளாரின் இடம் (க.சொக்கலிங்கம்), மனம் பற்றி சுவாமி சுவாமி விபுலாநந்தர் (சோ. கிருஷ்ணராஜா), விபுலாநந்த அடிகளாரின் ஆய்வுப் புலங்கள் (இ.பாலசுந்தரம்), சுவாமி விபுலாநந்தரும் ஈழத்தமிழும் (அ. சண்முகதாஸ்), அடிகளாரைக் கவர்ந்த ஆங்கில இரங்கற்பா (சோ.பத்மநாதன்), விபுலாநந்த அடிகள்: ஆய்வடங்கல் (விமலா பாலசுந்தரம்), விபுலாநந்த ஆய்வியல் பற்றிய ஒரு பிரச்சினை மையம் (கா.சிவத்தம்பி), முத்தமிழ் முனிவரின் சமய சமரசம் (ஏ.ஜே.வி.சந்திரகாந்தன்), விபுலாநந்தரும் கவிதையும் (எஸ்.சிவலிங்கராஜா), இந்துப் பண்பாடும் விபுலாநந்த அடிகளாரும் (நாச்சியார் செல்வநாயகம்), விபுலாநந்த அடிகளாரின் விஞ்ஞானச் சார்பு (இ.முருகையன்), விபலாநந்தர் மீட்சிப் பத்திலிருந்து (ஏ.பெரியதம்பிப்பிள்ளை), வரலாறு படைத்த பெரும் தமிழனாவான் (நாக. சண்முகநாதபிள்ளை), விபுலாநந்த அடிகள் பற்றிய சில பதிவுகள் (கி.விசாகரூபன்) ஆகிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 22677).

ஏனைய பதிவுகள்

Free Classic Slots Oline

Content Playtime Piano Disney Level You’ve Won A Free Spin The interface is a replica of the much-loved games and has a simple 3×1 grid