12960 – பிரித்தானியாவின் புதிய அடிப்படை வரலாறு: இரண்டாம் பகுதி 1485-1688.

யொட்சு தவுன்சென் உவாணர், சி.என்றி கே. மாட்டின், டி.எசுகின் மூர் (ஆங்கில மூலம்). சோ.நடராசா (தமிழாக்கம்). கொழும்பு 7: வெளியீட்டுப் பிரிவு, அரச கரும மொழித் திணைக்களம், 1வது பதிப்பு, 1961. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).

x, 324 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 13.5 சமீ.

George Townsend Warner, C.Henry K.Marten, D.Erskine Muir ஆகிய மூவராலும் எழுதப்பெற்று லண்டன் டீடயஉமநை யனெ ளுழn நிறுவனத்தால் வெளியிடப்பெற்ற new Groundwork of British History Section Two (1485-1688) என்ற நூலின் தமிழாக்கம் இது. இலங்கைப் பாடசாலைகளில் உயர்வகுப்புகளுக்குப் பயன்படுத்தவென இலங்கை அரசகரும மொழித்திணைக்களத்தால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதில் புதிய முடியாட்சி-ஏழாம் என்றி (1485-1509), எட்டாம் என்றி (1509-1547), 1329 தொடக்கம் 1542 வரை கொத்துலாந்தின் நிலை, ஆறாம் எட்டுவேட்டு (1547-1553), தியூடர் மேரி அரசி (1553-1558) கத்தோலிக்க எதிரியக்கம், கொத்தலாந்திலே சமயச் சீர்திருத்தம், இலிசபெத்து (1558-1603), தியூடர் ஆட்சியில் அயலந்து (1485-1603), முதலாஞ் சேமிசும் (1603-1625) அவன் பிறநாட்டுப் பூட்கையும், முதலாம் சேமிசும் உண்ணாட்டு அலுவல்களும், முதலாம் சாள்சு (1625-1645), உண்ணாட்டுப் போர் (1642-1645), பொதுநலவாயமும் (1645-1653) புரப்பகமும் (1653-1659), பிரித்தானியப் பேரரசின் தொடக்கம், இரண்டாம் சாள்சு (1660-1685), இரண்டாம் செமிசு (1685-1688), சுதுவட்டு மன்னராட்சியில் அயலந்தும் கொத்தலாந்தும் ஆகிய 17 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23208).

ஏனைய பதிவுகள்