12964 – இலங்கையின் பண்டை நிலவாட்சியும் அரசிறையும்.

H.W.கொட்றிங்ரன் (ஆங்கில மூலம்), திருமதி வு.சிவரத்தினம் (தமிழாக்கம்). கொழும்பு 7: வெளியீட்டுப் பிரிவு, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், சேர் ஏர்ணஸ்ட் த சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1969. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).

viii, 154 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 14 சமீ.

H.W.Codrington அவர்களால் எழுதப்பெற்று இலங்கை அச்சத்தினரால் அச்சிடப்பெற்ற Ancient Land Tenure and Revenue in Ceylon என்ற நூலின் தமிழாக்கம் இது. இலங்கைப் பாடசாலைகளில் உயர்வகுப்புகளுக்குப் பயன்படுத்தவென இலங்கை அரசகரும மொழித்திணைக்களத்தால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. 1833 வரையிலான இலங்கையின் பண்டைய வரலாறு பற்றி அறிவதுடன் பண்டைய இலங்கையரின் பழக்கவழக்கங்கள் பற்றியும் அறிய இந்நூல் உதவுகின்றது. கிராமம், நிலப் பாகுபாடு, சேவையாட்சி முதலியன, சேவையடிப்படையில் கிராமங்கள், வரிகள் வருமதிகள் கட்டணங்கள் ஆகியன (இரு அத்தியாயங்கள்), தமிழ் மாவட்டங்கள், வரலாற்றுப் பொழிப்பு என எட்டு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அனுபந்தங்களாக, கம்-பந்திம, ஒரு புதிய கிராமத்தை உருவாக்கும் முறை, தளதாகேப் பொறிப்பு ஆகியன இணைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39741).

ஏனைய பதிவுகள்

12277 – வாழ்வகம்:விழிப்புல வலுவிழந்தோர் இல்லம்.

மோகனவதனி ரவீந்திரன். சுன்னாகம்: ஆறுமுகம் ரவீந்திரன், தலைவர், வாழ்வகம், சபாபதிப்பிள்ளை வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2015. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சாயி அச்சகம், காங்கேசன்துறை வீதி, இணுவில்). (6), 66 பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,