வே.க.நடராசா. யாழ்ப்பாணம்: சேது நூலக வெளியீடு, கேவளை, கரவெட்டி, 3வது திருத்திய பதிப்பு, மாசி 1973. (யாழ்ப்பாணம்: தமிழ்ப் பூங்கா அச்சகம், நெல்லியடி-கரவெட்டி).
viii, (24), 218 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 5.50, அளவு: 21 x 14 சமீ.
க.பொ.த. உயர்தர வகுப்புகளுக்குரிய இவ்வரலாற்று நூலில் பொலன்னறுவைக் காலத்துக்கும் பிந்திய காலங்களுக்கும் உரிய வரலாறுகள் விளக்கப்பட்டுள்ளதுடன் பரீட்சை வினாத்தாள்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. சோழராட்சியில் இலங்கைவிளைவுகள், விஜயபாகுவும் விடுதலை இயக்கமும், மகா பராக்கிரமபாகு, தென்கிழக்காசிய நாடுகளும் இலங்கையும், கலிங்க மன்னன் ஆட்சி: பொலந்நறுவை யின் வீழ்ச்சி, பொலந்நறுவைக் காலப் பண்பாடு, தம்பதெணிய அரசு: பாண்டிய செல்வாக்குப் பரவல், யாழ்ப்பாண அரசும் கம்பளை ஆட்சியாளரும், கோட்டை அரசின் எழுச்சி: 6ஆம் பராக்கிரமபாகு, பிந்திய காலச் சிங்களப் பண்பாடு ஆகிய 10 அத்தியாயங்களில் விளக்கப்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39627).