12967 – இலங்கையில் இனப்பிரச்சினையின் வரலாறு: 1833-1990 வரை காலவரிசைப்படுத்தப்பட்ட சிறு குறிப்புகள்.

சி.அ.யோதிலிங்கம். கொழும்பு 7: விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம், இல.3, டொறிங்டன் அவென்யு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).

54 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5 x 10.5 சமீ.

இலங்கையில் தமிழ் சிங்கள முஸ்லிம் இனங்களுக்கிடையேயான பிரச்சினை 1833ஆம் ஆண்டிலிருந்து பதிவுசெய்யப்பட்டுவந்துள்ளது. 1948இல் சுதந்திரத்திற்குப் பின்னர் இப்பிரச்சினையின் போக்கு தீவிரமடைந்து வந்துள்ளது. காலக்கிரமத்தில் அரசியல்மயப்படுத்தப்பட்ட இனவாத சிந்தனையால் ஆயுதரீதியான இன விடுதலைப் போராட்டமாக அது எழுச்சிபெற்றமை ஒரு துன்பியல் வரலாறாகும். இந்நூலில் 1833-1990 வரையான காலகட்டத்தில் இடம்பெற்ற இனப்பிரச்சினை தொடர்பான சம்பவங்கள், தீர்வு முயற்சிகள் என்பவற்றை காலவரிசைப்படுத்தப்பட்ட பட்டியலாகச் சிறு குறிப்புகள் வாயிலாக இந்நூலில் ஆசிரியர் பதிவுசெய்திருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25489).

ஏனைய பதிவுகள்

12413 – சிந்தனை தொகுதி XIV, இதழ் 2 (ஜுலை 2004).

கார்த்திகேசு குகபாலன் (இதழாசிரியர்), சோ.கிருஷ்ணராசா (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜுலை 2004. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி). 129 பக்கம்,

14627 நினைவுகள் துணையாக.

பொலிகையூர் ரேகா. ஜேர்மனி: வெற்றிமணி வெளியீடு, Brinker Höhe 13, 58507 Lüdenscheid, 1வது பதிப்பு, மார்ச் 2020. (சென்னை 600 106: மலர்க்கண்ணன் பதிப்பகம், 24/1, பச்சையப்பா தெரு, சான்றோர் பாளையம், அரும்பாக்கம்).

12294 – எண்ணக்கரு கற்றல்.

சபா.ஜெயராசா. யாழ்ப்பாணம்: அம்மா வெளியீடு, இணுவில், மருதனார்மடம், 1வது பதிப்பு, 1992. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம்). (4), 46 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 18×12.5 சமீ. Concept learning என்று வழங்கப்படும்

12550 – செந்தமிழ்ப் பூம்பொய்கை பாகம் 3.

ஆ.சி.நாகலிங்கம்பிள்ளை. யாழ்ப்பாணம்: ஆ.சி.நாகலிங்கம்பிள்ளை, சுதுமலை, 1வது பதிப்பு, 1949. (யாழ்ப்பாணம்: ச. குமாரசுவாமி, சண்முகநாதன் அச்சகம்). iv, 130 பக்கம், விலை: ரூபா 1.30, அளவு: 21×14 சமீ. பாடசாலை மாணவர்களின் தமிழ் அறிவை

14603 சிகண்டி: தன்னைக் கடந்தவள்.

கவிதா லட்சுமி. சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ், 214, புவனேஸ்வரி நகர் 3வது மெயின் ரோடு, வேளச்சேரி, 1வது பதிப்பு, ஜனவரி, 2020. (அச்சக விபரம் தரப்படவில்லை). (8), 9-114 பக்கம், விலை: