அ.சி.உதயகுமார். சுன்னாகம்: ஐளெவவைரவந ழக ர்ளைவழசiஉயட ளுவரனநைளஇ வேதராணியார் வளவு, உடுவில், 1வது பதிப்பு, ஏப்ரல் 2002. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).
xxii, 58 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20 x 14.5 சமீ.
இலங்கையின் தேசக் கொடி பற்றியும் அதில் காணப்படும் வாளினை ஏந்தும் ஆண்சிங்கமொன்றின் உருவப்படம் பற்றியும் அதன் அரசியல் பின்னணி பற்றியும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளது. அதன் பின்னணியில் இலங்கையின் இனப் பிரச்சினைக்கான தீர்வுபற்றியும் பேசப்படுகின்றது. கவனிக்கப்படாத பல்வேறு சிறு விடயங்களே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணுவதில் பிரச்சினைகளை தோற்றுவித்தபடி உள்ளன என இந்நூல் குறிப்பிடுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 26751).