12970 – உதவி, மோதல் மற்றும் இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் 2000- 2005.

ஜொனாதன் குட்ஹான்ட், பார்ட் கிளெம், டில்ருக்சி பொன்சேகா, எஸ்.ஐ.கீதபொன்கலன் மற்றும் சொனாலி சர்தேசாய். கொழும்பு 7: ஆசிய மன்றம், 3 1/A, ராஜகீய மாவத்தை, 2வது பதிப்பு, 2005, 1வது பதிப்புவிபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).

iii, 173 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28 x 21 சமீ.

நெதர்லாந்து வெளிவிவகார அமைச்சு, சுவீடிஷ் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு முகவரகம், ஆசியமன்றம், ஐக்கிய இராச்சிய அரசாங்கம் , உலக வங்கி ஆகியவற்றின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட திட்டத்தின் பெறுபேறாக இந்நூல் வெளியிடப் பட்டுள்ளது. 2000ஆவது ஆண்டின் பின்னர் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள் குறித்த ஒரு பொது நோக்கு, மோதல் கட்டமைப்புக்கள் (அறிமுகம்/இலங்கை மோதலின் அமைப்புரீதியான பரிமாணங்கள்/மோதல் கட்டமைப்புக்கள் குறித்த முடிவுரைகள்), மோதல் இயங்கியல் (அறிமுகம்/சமாதானத்தின் இயங்கியல்/ பாதுகாப்பு இயங்கியல்/அரசியல் இயங்கியல்: துண்டாடப்பட்ட நிலை மற்றும் சமாதானச் செயன்முறை/ சுனாமி மற்றும் சமாதானம்/மோதல் இயங்கியல்ஃ முடிவுக் குறிப்புகள் மற்றும் வருங்காலத் தோற்றப்பாடுகள்), சர்வதேச தலையீடு (அறிமுகம்/சமாதானத்தை எடுத்து வருதல்/அபிவிருத்தி உதவி மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல்/ சுனாமி மற்றும் சர்வதேச உதவி/முடிவுரைகள்), முடிவுரைகள் மற்றும் தாக்கங்கள் (ஒட்டுமொத்த முடிவுரைகள்/சமாதானத்தை எடுத்து வருவது தொடர்பான தாக்கங்கள்ஃஉதவி வழங்குநர்கள் தொடர்பான தாக்கங்கள்) ஆகிய ஆறு பிரிவுகளில் இவ்வறிக்கை எழுதப்பட்டுள்ளது. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 44545).

ஏனைய பதிவுகள்