12975 – மனிதனைத் தேடும் மனிதன்.

அன்ரன் பாலசிங்கம். சென்னை 600004: கானல் வெளியீடு, 1வது பதிப்பு, 2014. (சென்னை: கிளாசிக் பிரின்டர்ஸ்).

176 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21.5 x 13.5 சமீ.

1990களின் முற்பகுதிகளில் கருணாகரனை ஆசிரியராகக் கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து கலை பண்பாட்டுக் கழகத்தினால் வெளியிடப்பட்டுவந்த ‘வெளிச்சம்’ சஞ்சிகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் பிரம்மஞானி என்ற புனைபெயரில் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு. எம்.ஜி.ஆரும் புலிகளும், ராஜீவ்-பிரபா சந்திப்பு, மனிதனைத் தேடும் மனிதன், கருத்துலகமும் வாழ்வியக்கமும், மனப்புரட்சியும் மனித விடுதலையும்-ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, உலக வரலாறும் மனித விடுதலையும், பழமைக்கு எதிரான பண்பாட்டுப் புரட்சி, அதிகாரத்தின் அரூபக் கரங்கள், தனி மனித தத்துவம், அர்த்தமும் அபத்தமும், மனிதத்துவம்-சாத்தர் பற்றிய ஒரு அறிமுகம் ஆகிய பதினொரு கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

14088 ஈழத்து இந்துக் கோயில்கள்: ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2019.

ஏ.அனுசாந்தன், தேவகுமாரி ஹரன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1 காலி வீதி, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39,

11901 அருளாளர்கள் அறுபத்து மூவர்: சிவனடியார்கள் அருள் வரலாறு.

இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு. தெகிவளை: திருமதி இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு, 24 சீ, எதிரிவீர அவென்யூ, 1வது பதிப்பு, ஜுலை 2016. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). xxviii, 272 பக்கம், விளக்கப்படங்கள்,