12977 – விடுதலைப் புலிகளும் சமாதான முயற்சிகளும்.

கரிகாலன் (தொகுப்பாசிரியர்), கு.பூபதி (பதிப்பாசிரியர்). சென்னை 600078: தோழமை வெளியீடு, எண் 10, ஆறாவது தெரு, முதல் பிரிவு, கே.கே.நகர், 1வது பதிப்பு, ஜுலை 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).

375 பக்கம், விலை: இந்திய ரூபா 300., அளவு: 21.5 x 14 சமீ., ISBN: 978-93-80369- 39-6.

விடுதலைப் புலிகள் சமாதான முயற்சிகளில் அக்கறையுடன் செயற்படவில்லை என்று பரவலான கருத்தொன்று உலக அரங்கில் விதைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மறுதலிப்பதாக, சமாதான நோக்கில் விடுதலைப் புலிகளுக்கு இருந்த ஈடுபாட்டை விளக்கும் நோக்கில் விடுதலைப் புலிகளின் பார்வையில் அவர்களின் நியாயப்பாடுகளை உள்ளடக்கி வெளிவந்திருக்கும் விரிவான அரசியல் வரலாற்று ஆவண நூல் இது. ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் காலப்பகுதியில் 2.9.1994 இல் த.வி.பு.தலைவர் வே.பிரபாகரன் பத்திரிகை அறிக்கையின் மூலம் தொடக்கி வைத்த சமாதானத்துக்கான பாதையில் நடைபெற்ற தொடர் கடிதப் பரிமாறல்கள், சம்பவங்கள் ஆகியவற்றின் துணையுடன் இக்கட்டுரை வடிவமைக்கப் பட்டுள்ளது. 7.2.2004இல் விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பாராளுமன்றக் கலைப்பு வரையிலுமான விடுதலைப் புலிகள் – (நோர்வேயின் பங்களிப்புடனான) அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் முறிவு வரையில் மிக விரிவாக இந் நூலில் எழுதப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகளில் நேரடித் தொடர்புள்ளவராக உணரப்பட்டபோதிலும் இந்நூலின் ஆசிரியர் யார் என்று நூலின் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை. பயன்படுத்தப்பட்ட கடிதத்தொடர்பு ஆவணங்கள் மூலப்பிரதிகளாகவன்றி, நூலுக்காகவே மீளத்தட்டச்சிடப்பட்டமையால் அவற்றின் ஆய்வுநோக்கம் கருதிய நம்பகத்தன்மையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் வரலாற்று நம்பகத்தன்மை பற்றிய எவ்வித உசாத்துணை ஆதாரங்களும், மூலாதாரக் குறிப்புகளுமின்றி இந்நூல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: 12224,12227,12236,12240,12259,12981,12994.

ஏனைய பதிவுகள்

Das Beste Casino Mit Paysafecard 2024

Content Ist Die Einzahlung Mit Paysafecard Gebührenpflichtig? Wie Funktioniert Ein Online Casino Bonus Ohne Einzahlung? Nachteile Bei Der Verwendung Der Paysafecard In Online Casinos Euro

14411 பேச்சு சிங்களம்: அரசகரும மொழிகள் தேர்ச்சி-மேலதிக வாசிப்பு நூல்.

ஜே.பீ. திசாநாயக்க. கொழும்பு: அரசகரும மொழிகள் திணைக்களம், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு, பாஷா மந்திரய, 341/7, கோட்டே வீதி, ராஜகிரிய, 1வது பதிப்பு, 2017. (நுகேகொட: இமாஷி அச்சகம்,