ஆதிகோவிலடி ஜெயம் (இயற்பெயர்: நடராசா சிவரத்தினம்). யாழ்ப்பாணம்: வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கம், இணை வெளியீடு: வல்வெட்டித்துறை: கலை கலாச்சார இலக்கிய மன்றம், 2வது பதிப்பு, 2013, 1வது பதிப்பு, 1995. (யாழ்ப்பாணம்: குரு பதிப்பகம், ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
xvi, 91 பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 20 x 14.5 சமீ.
ஆழ்கடல் வென்றவர்களில் இறுதியாக வாழ்ந்தவர்களில் ஒருவரான ஐயாத்துரை இரத்தினசாமியின் எண்ணக் கருத்தக்களை மிகவும் தத்ரூபமாக இந்நூலில் விபரித்து எம்மையெல்லாம் 1938ஆம் ஆண்டிற்கு அழைத்துச் செல்கிறார். திரு. இரத்தினசாமியின் நேர்காணலில் இருந்து 7ஆம், 8ஆம் நூற்றாண்டுகளிலிருந்து இவ்வூரில் வாழ்ந்த கப்பல் உரிமையாளர்கள் பற்றியும், கப்பல் கட்டும் தொழிலாளர் கள் பற்றியும் அறியமுடிகின்றது. 89 அடி நீளமான இரட்டைப் பாய்மரக் கப்பலான அன்னபூரணி கப்பலைக் கட்டி அதனைத் தற்பாதுகாப்பு அங்கிகளோ, உரிய பாதுகாப்புக் கருவிகளோ இல்லாமல் ஐந்தே ஐந்து வல்வை மாலுமிகளுடன் அத்திலாந்திக் கடலைக் கடந்த கதை மயிர்க்கூச்செறியச் செய்கின்றது. நூலாசிரியர் இலங்கை வங்கியின் வடமாகாண உதவிப் பொது முகாமையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். படைப்பாளியாக ‘வரலாற்றில் வல்வெட்டித்துறை’ என்ற நூலை முன்னர் வெளியிட்டவர். யாழ்மாவட்ட இலங்கை வங்கி விளையாட்டு நலன்புரி இலக்கிய மன்றத்தின் தலைவராகவும் ‘ஊக்கி’ காலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 261845CC).