12983 – இணையிலி:சீரிணுவைத் திருவூரின் வாழ்வும் வளமும்.

மூத்ததம்பி சிவலிங்கம். யாழ்ப்பாணம்: சைவத்திருநெறிக் கழகம், இணுவில், 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: ஈஸ்வா பிறின்டேர்ஸ், திருநெல்வேலி).

xiv, 446 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 1000., அளவு: 25ஒ18.5 சமீ., ISBN: 978-955-44538-0-7.

இந்நூல் சமய இயல், கல்வி இயல், கலை இயல், வாழ்வாதார இயல், சிறப்பியல், தொன்மை இயல், நிறைவியல் எனும் ஏழு இயல்களாக வகுக்கப்பட்டும் அவ்வவ் வியல்களுக்குரிய தகவல்கள் உபதலைப்புகளில் தொகுக்கப்பட்டும் பதிவுசெய்யப் பட்டுள்ளன. சமய இயலில் இணுவிலைச் சேர்ந்த கோயில்கள், சித்தர்கள், அருளாளர்கள், அந்தணர்கள், பூசகர்கள் ஆகியோர் பற்றிய தகவல்களும், கல்வியியலில் இணுவிலைப் பொலிவுறச்செய்த திண்ணைப் பள்ளிகள், புலவர்கள், பண்டிதர்கள், பேராசிரியர்கள், கலாநிதிகள், கல்விச் சாலைகள், மற்றும் கல்வித் துறையினர், இலக்கியப் படைப்பாளிகள் பற்றிய தகவல்களும், கலை இயலில் இணுவைக் கலைஞர்கள் பற்றியும் அவர்களால் பொலிவுபெற்ற கலைகள் பற்றியும் தகவல்கள் தரப்பட்டுள்ளன. வாழ்வாதார இயலில் இணுவிலில் சிறந்தோங்கிய கைத்தொழில், நெசவுத் தொழில், மற்றும் தொழில் நிறுவனங்கள், வைத்திய பரம்பரையினர், கூட்டுறவு, சோதிடம், சந்தை பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன. சிறப்பியலில் உலக அரங்கில் இணுவிலுக்குப் பெருமை தேடித்தந்த மகான்கள், சான்றோர்கள், பிரமுகர்கள், பொது நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் தரப் பட்டுள்ளன. தொன்மை இயலில் பெருமைதரும் பண்பாட்டுப் பாரம்பரியங்கள், அறநெறி தவறாத மூத்தோர் வாழ்க்கைமுறைகள் பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன. இறுதியான நிறைவியலில் இணுவைத் திருவூர் பற்றிய 150 ஆண்டுக்கால பாரம்பரிய வரலாற்றைத் தொகுத்து வழங்கிய அனுபவக் குறிப்புடன் இந்நூலை ஆசிரியர் பூர்த்திசெய்கின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 53962).

ஏனைய பதிவுகள்