12984 – இராவண தேசம்: திருகோணமலை மண்ணின் வரலாற்றுப் பதிவுகள்.

திருமலை நவம் (இயற்பெயர்: திரு.சி.நவரத்தினம்). திருக்கோணமலை: வி.மைக்கல் கொலின், தாகம் பதிப்பகம், அனுசரணை, கனடா: உள்ளம் அமைப்பினர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (மட்டக்களப்பு: வணசிங்கா பிரின்டர்ஸ், திருக்கோணமலை வீதி).

xvi, 160 பக்கம், வண்ணப் புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 20.5 x 14.5 சமீ., ISBN: 978-955-4044-00-5.

வீரகேசரி பத்திரிகையில் தொடராக வெளிவந்த திருக்கோணேஸ்வரம், கன்னியா வெந்நீரூற்றுக்கள், கங்குவேலி அகத்தியர் ஸ்தாபனம் ஆகிய மூன்று கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. திருக்கோணமலையின் வரலாற்றைப் பேசும் தன்மையால் மூன்று கட்டுரைகளுக்கிடையேயும் ஒற்றுமை உள்ளது. தமிழரின் பாரம்பரிய அடையாளமான கன்னியா வெந்நீரூற்று எவ்வாறு அதன் பூர்வீக அடையாளங்கள் அழிக்கப்பட்டும் சிதைக்கப்பட்டும் பேரினவாத சக்திகளினால் அபகரிக்கப்பட்டுள்ளன என்பதைப் பொருத்தமான ஆவணங்களின் துணையுடன் புலப்படுத்துகின்றார். இதற்குச் சில தமிழர்களும் துணைபோனமை வேதனையாக உள்ளது. கன்னியாவைப்போலன்றி பாடல்பெற்ற திருத்தலமான கோணேஸ்வரத்தின் தொன்மையைக் காட்ட விஷமிகள் அழிக்கமுடியாத வகையில் பற்பல சான்றுகள் உள்ளதை திருக்கோணேஸ்வரம் என்ற கட்டுரை தெளிவுபடுத்துகின்றது. கங்குவேலி அகத்தியர் ஸ்தாபனம் என்ற மூன்றாவது கட்டுரையின் வாயிலாக, கன்னியா வெந்நீரூற்றின் அதிகாரபூர்வமான கையகப்படுத்தலுக்கு வழிகோலிய அரச அதிபர் மேஜர் ஜெனரல் வு.வு.சு.னு. சில்வா தனது செயலுக்குப் பரிகாரம் தேடும் முகமாக பேரினவாதிகளின் அடாவடித்தனத்தால் சிதைக்கப்பட்ட மற்றொரு புராதன ஆலயத்தின் புனருத்தாபனத்திற்கு பக்தி சிரத்தையுடன் உதவிய செயல்குறித்தும் ஆசிரியர் பதிவுசெய்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

No-deposit Incentive

Content 50 Tours Dès L’inscription Sur 8 Dragons Chez Jet Casino Put step 1 Rating one hundred Totally free Spins To your Cellular Casinos Totally