12989 – யாழ்ப்பாணச் சரித்திரம்: ஆங்கிலேயர் காலம்.

முதலியார் செ.இராசநாயகம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, மீள்பதிப்பு, 2018, 1வது பதிப்பு 1934. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 180 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5 x 14.5 சமீ., ISBN: 978-955-659-583-3.

ஆரம்பகாலம் தொடங்கி ஒல்லாந்தர் காலம் வரையிலான யாழ்ப்பாண வரலாற்றை விபரித்து ‘யாழ்ப்பாணச் சரித்திரம்’ என்ற முதலியார் செ.இராசநாயகம் அவர்களால் எழுதப்பட்ட புகழ்பெற்ற நூலினைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பிரதேசத்தின் ஆங்கிலக்கால வரலாற்றை விபரிப்பதாக இந்நூல் அமைந்துள்ளது. வடமாகாண ஏசண்டர்கள், தலைமைக்காரர், வரிகள், நீதி பரிபாலனம், நாணயங்கள், ஏற்றுமதி – இறக்குமதி, ஊழியம், முத்துச்சலாபம், புகையிலை, புடைவை நெய்தல், தபால், பகிரங்க வீதிகள், சட்டசபைத் தமிழ்ப் பிரதிநிதிகள், இந்தியக் கூலிகள், யாழ்ப்பாணச் சுகாதாரம் போன்ற 37 விடயங்களினூடாக யாழ்ப்பாணத்தின் ஆங்கிலகால வரலாறு இந்நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நவாலியைப் பிறப்பிடமாகக் கொண்ட முதலியார் செ.இராசநாயகம்(1870-1940), கல்கிசை புனித தோமஸ் கல்லூரியில் கல்வி கற்ற பின்னர் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளராகவும் பின்னர் உயர்நீதிமன்றப் பதிவாளராகவும் பணியாற்றி முதலியார் பட்டம் பெற்றவர். பின்னர் சிவில் சேவையில் இணைந்து யாழ்ப்பாணக் கச்சேரியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். யாழ்ப்பாணம் தொடர்பான வரலாற்றாராய்ச்சியில் ஆழ்ந்த ஈடுபாட்டைக் கொண்ட இவர் இத்துறையில் ஒரு முன்னோடியாவார்.

மேலும் பார்க்க: 13A22,13A30,12087,12965

ஏனைய பதிவுகள்

12488 – தென்னவள்: மார்கழித் திங்கள் முழுநிலா நாள் கலைவிழாச் சிறப்பு மலர் 2014.

தி.அபராஜிதன் (இதழாசிரியர்). சாவகச்சேரி: தென்மராட்சி கல்வி வலயம், கல்வித் திணைக்களம், 1வது பதிப்பு, 2014. (சாவகச்சேரி: கஜானன் பன்முக சேவைகள், மீசாலை). xix, 44 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17.5