12991 – அடங்காப்பற்று வன்னியில் ஆதிகாலத் தமிழர் வரலாறு: நாகர்காலத்துப் புராதன தொல்பொருட் சின்னங்கள்.

அருணா செல்லத்துரை. வவுனியா: அருணா வெளியீட்டகம், எண் 68, வைரவர் கோவில் வீதி, வைரவர் புளியங்குளம், 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xxiv, 151 பக்கம், புகைப்படங்கள், வண்ணத் தகடுகள், விலை: ரூபா 1300., அளவு: 23.5 x 18 சமீ., ISBN: 978-955-1347-20-8.

அடங்காப்பற்று வன்னியின் இயற்கை அமைப்பு, வேடர்கள்-இயக்கர்கள்-நாகர்கள், ஆறுகளும் அணைக்கட்டுகளும் குளங்களும், புராதன காலங்களும் பிரிவுகளும், சமய வழிபாடுகள், அடங்காப்பற்றில் இலிங்க வழிபாட்டுத் தலங்கள், நாகவழிபாடும் நாகலிங்க வழிபாடும், அடங்காப்பற்று வன்னியில் கருங்கல் செங்கல் பாவனை, அந்நியர் ஆட்சியில் அடங்காப்பற்று வன்னி, அடங்காப்பற்று வன்னியில் நாகர்கால புராதன தொல்லியல் சின்னங்கள் ஆகிய பத்து அத்தியாயங்களில் இந்நூல் புகைப்பட ஆதாரங்களுடன் எழுதப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் அருணா செல்லத்துரை தொல்லியல் பயின்ற ஆய்வாளர் அல்ல. இருப்பினும் தான் கண்டவற்றை பிறரும் அறியும் வகையில் பத்திரிகைகளில் கட்டுரைகளாக எழுதிவருபவர். அவரது சாதனைகள் அடங்காப்பற்று வன்னியிலே தமிழரின் ஆதிகால வரலாற்றை ஆழமாகவும் பரந்தளவிலும் ஆய்வுசெய்வதற்கு அடித்தளம் அமைத்துள்ளன. அக்காலத்துச் சமுதாய நிலைகள், வழிபாட்டு முறைகள், கட்டுமான முறைகள், நீர்த்தேக்கங்கள் என்பன பற்றிய ஆய்வுகளுக்கு அவை ஆதாரமாகின்றன. இதுவரை வேறெவரும் கண்டு அடையாளப்படுத்த முடியாது போன பண்பாட்டுச் சின்னங்கள் பற்றிய விபரங்கள் பெரும் அளவிலானவற்றை அவர் வெளியிடுகின்றார்.

ஏனைய பதிவுகள்